”இல்லை நான் போக மாட்டேன் நீ வா என்கூட, வந்து எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேளு இல்லையா எனக்கான நியாயத்தை சொல்லு அப்பதான் நான் போவேன்”
”படிச்ச பொண்ணுதானே நீ, இவ்ளோ பிடிவாதம் பிடிக்கற, நான் மட்டும் வராம இருந்திருந்தா இந்நேரம் உன் கார் நெருப்புல தீ பிடிச்சி எரிஞ்சிருக்கும், கூடவே நீயும் எரிஞ்சி போயிருப்ப, தேவையா உனக்கு”
“இவ்ளோ பேசறல்ல ஒரு முறை உன் தப்பை உணர்ந்து மன்னிப்பு கேட்டா என்ன குறைஞ்சா போயிடுவ“
”நான்தான் உன்கிட்ட மன்னிப்பு கேட்டேனே, வேணும்னா உன் அப்பாவிடம் போன் மூலமா மன்னிப்பு கேட்கறேன், அதை விட்டுட்டு என்னை கூட்டிட்டுப் போகனும்னு நினைக்காத, என்னால வரமுடியாது நான் எப்படா வெளிய வருவேன்னு எல்லாரும் ஆர்வமா பார்க்கறாங்க, நான் வெளிய வந்தா அவ்ளோதான் என்னை கொன்னுடுவாங்க, என்னிக்கிருந்தாலும் நான் சாகத்தான் போறேன், அது எனக்குத் தெரிஞ்சிடுச்சி, வீணா நீயும் ஏன் சாகனும், நாளைக்கு காலையில என் ஆளுங்களை உன்கூட அனுப்பறேன் அவங்களோட நீ கிளம்பி உன் அப்பாகிட்ட போ”
“முடியாது இன்னும் நீ எனக்கு நியாயம் வழங்கலை”
”இவ்ளோ சொல்றேன், ஆனாலும் வீம்பு பிடிக்கறியே, உன் கண்ல எவ்ளோ பயம் இருக்கு தெரியுமா, அப்புறமும் ஏன் வீம்பு பிடிக்கற” என கேட்க அவளோ
”எனக்கு நியாயம் கொடு” என்றாள். அதில் அவனோ
”நாளைக்கு கொடுக்கறேன்”
”கண்டிப்பா”