(Reading time: 6 - 12 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

“எல்லாம் நல்லாவே புரியுது... உனக்கு அவளுக்கு ஃபர்ஸ்ட் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி இருக்கேன்னு வயித்தெரிச்சல், பொறாமை! ஆனால், அதுக்கு நாங்க என்ன செய்ய, சொல்லு? அவசர அவசரமா உனக்கு மாப்பிளை தேடுனா கூட அக்ஷ்ரா சொல்ற டைம்லைன்ல எல்லாம் நடக்குறது கஷ்டம். அவ வீட்டுல ஜெட் வேகத்துல இருக்காங்க.”

   

கணேஷின் கிண்டல் பேச்சை கேட்டு அகிலா கோபத்துடன் முறைக்க, அக்ஷரா,

   

“எனக்குமே இது பெரிய சர்ப்ரைஸ் தான் ராம்போ! அம்மா, என் ஸ்வீட் ஹார்ட் கல்யாண பேச்சை ஸ்டார்ட் செய்தாங்கன்னு என் கிட்ட சொன்னப்போ, என்னவோ புரியாத பாஷை மாதிரி தான் இருந்துச்சு. ஆகாஷை நான் வேற மாதிரி யோசிச்சதே இல்லை. அம்மா எடுத்து சொன்னப்போ எல்லாம் ஓகேன்னு தான் தோணிச்சு... ஆனாலும் ஆறு மாசத்துல கல்யாணம்னு சொன்னப்போ எபப்டியோ இருந்துச்சு!”

   

“நீ ஒரு வேஸ்ட் அக்ஷரா! கல்யாணம்னு சொன்ன உடனே ஓகே சொல்லிடுவீயா? அது இதுன்னு சொல்லி யோசிக்கவாவது டைம் கேட்டிருக்கனும்,” என்றாள் அகிலா!

   

“ஹேய் அகி, எதுக்கு இப்போ அவளை தேவையே இல்லாம குழப்புற நீ? அவங்க வீட்டுல ஃபிக்ஸ் செய்தாங்க, அவளுக்கும் பிடிச்சிருச்சு... அவ்வளவு தானே.. விடு... இப்போ ட்ரீட் டைம்... எங்களுக்கு எல்லாம் ட்ரீட் இல்லையா அக்ஷ்ரா?”

   

அகிலா கணேஷை ஒரு பார்வை பார்த்தாள்...!

   

அக்ஷ்ராவுக்கும் கூட எதனாலோ கணேஷ் அப்படி ஈசியாக அந்த டாபிக்கை முடித்தது பிடிக்க தான் இல்லை... ஆனால் ஏன் என்பதும் அவளுக்கு புரியவில்லை.

   

“என்ன அக்ஷரா? ட்ரீட் கேட்டா இப்படி பார்க்குற? அதுக்குள்ளே கஞ்சப்பிசினாரியா மாறிட்டீயா???”

   

“அதெல்லாம் இல்லை ராம்போ... உனக்கு என்ன வேணுமோ ஆர்டர் செய்... அகி நீயும் தான்...”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.