மூவரும் தங்களுக்கு பிடித்த ஐஸ்க்ரீம்களை ஆர்டர் செய்து விட்டு பேச்சை தொடர்ந்தார்கள்.
இப்போதும் ட்ராக் மாறாமல், “இந்த கல்யாண ஐடியா யாருக்கு வந்துச்சாம் அக்ஷ்ரா?” என அக்ஷராவின் கல்யாண பேச்சையே தொடர்ந்தாள் அகிலா!
“ஆகாஷுக்காம் அகி! நானும், என் ஸ்வீட் ஹார்ட்டும் எவ்வளவு க்லோஸ்ன்னு உனக்கும் தெரியுமே... ஸோ, அவங்களுக்கு பிடிச்ச மாதிரியான பொண்ணுன்னு யோசிச்சதில நான் தான் முதல் சாய்ஸ்,” என்றாள் அக்ஷரா முகம் மலர்ந்து மின்ன!
“ப்ச்... இதுல நீ இப்படி சந்தோஷப்பட என்ன இருக்கு?? எப்படி பார்த்தாலும் இது மேரேஜ் ஃபார் பெனிபிட்! வரதட்சணைன்னு காசு கொடுத்து கல்யாணம் செய்துக்குறதுக்கும், இப்படி செய்றதுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?”
“இப்போ நீ என்ன சொல்ல வர அகி?”
“கல்யாணம்னா, கல்யாணம் செய்துக்குற இரண்டு பேருக்கும் நடுவே அன்பு இருக்கனும்... அண்டர்ஸ்டாண்டிங் இருக்கனும்... உனக்கு நான் எல்லாம் செய்வேன்னு ஒரு அட்டாச்மென்ட் இருக்கனும்...”
“நீ சொல்றது எல்லாமே எனக்கும் அகாஷ்க்கும் நடுவே இருக்கு...”
“அக்ஷரா, நீ எதுக்கு இவளுக்கு பதில் சொல்லிட்டு இருக்க?? அவ நிறைய ரொமான்டிக் ஸ்டோரீஸ் படிச்சு மண்டை குழம்பி போயிருக்கா. கதை வேற, நிஜம் வேறன்னு அவளுக்கு புரியலை,” என்றான் கணேஷ்.
“ஆமான்டா, எனக்கு தான் புரியலை. இவனுக்கு எல்லாம் தெரியும்!”
அகிலாவின் கோபம் திசை மாறி போனது போலவே அவளின் பேச்சும் கணேஷ் பக்கமாக திசை மாறி போனது.