“என்னவோ போங்க... ஒருவேளை திரும்ப பணக்காரியாக தான் பணக்காரனா தேடுறாளோ என்னவோ...”
“ரேவதி! உனக்கு என்ன ஆச்சு? ஏன் இப்படி எல்லாம் பேசுற? நான் ஒன்னு சொல்லட்டுமா, உன் மனசுல இருக்க சந்தேகத்தை உதயை பிடிச்சு உட்கார வச்சு நேரா கேட்டுரு...”
“அப்படி செய்ய முடிஞ்சா பரவாயில்லையேக்கா...”
“உன் பிள்ளையை கேட்க முடியாது ஆனால் நந்துவை பார்த்து கேட்க முடியுமா? திரும்பவும் சொல்றேன் ரேவதி, நந்து நல்ல பொண்ணு... நீ நினைக்குற மாதிரி எல்லாம் செய்ய மாட்டா... வசதிக்காக எல்லாம் ஆசைப் படுறவ அவ இல்லை... எங்க வீட்டிலேயே தங்கி இருந்தா சரியா இருக்காதுன்னு ஹாஸ்டல் போறேன்னு சொன்னவளை, நானும் அவரும் தான் கட்டாயப் படுத்தி வீட்டிலேயே தங்க வச்சிருக்கோம்... உன் கிட்ட யாரோ எதுவோ நந்து பத்தி தப்பா சொல்லி இருக்காங்க... வேற எங்கேயோ தப்பு இருக்கு...”
“இல்லை அக்கா... அவக் கிட்ட எதுவோ சரியில்லை, எனக்கு என்னவோ சந்தேகமா தான் இருக்கு... என்ன செய்றதுன்னே புரியலை!”
“பேசாம உதய்க்கு கல்யாணம் செய்து வச்சிடு... அவன் கிட்ட நேரா பேசு... அவனுக்கு பிடிச்ச பொண்ணா...”
காமாட்சியை பேச விடாமல் குறுக்கிட்டு, “அவனுக்கு பிடிச்ச பொண்ணுன்னு எல்லாம் யாருமில்லை... என் கிட்ட எனக்கு பிடிச்ச பொண்ணை தான் கல்யாணம் செய்துப்பேன்னு உதயே சொன்னான்,” என்றாள் ரேவதி.
“எப்போ சொன்னான்?”
“கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான்...”
உதயின் ‘திறமை’யை மனதினுள் மெச்சிக் கொண்ட காமாட்சி, “அதென்னவோ எனக்கு