தெரியாது... அவனுக்கு பிடிச்ச பொண்ணுன்னு யாரும் இல்லைனா உனக்கு பிடிச்ச மாதிரி ஒரு பொண்ணு செலக்ட் செய்றேன்னு அவன் கிட்ட சொல்லு,” என்றாள்.
“இதையே தான் ரொம்ப நாளா சொல்றேன்... அதுக்கு தானே அவனுக்கு கோபம் பொத்துக்கிட்டு வருது... அக்கா, எனக்கு இருக்கிறது ஒரே பையன், வர போற மருமக எப்படி இருப்பாளோன்னு நினைச்சா பயமா இருக்கு...”
“இங்கே பாரு, தேவை இல்லாமல் யோசிக்காதே... உதய் கிட்ட பேசி ஒரு முடிவுக்கு வா...”
“அவன் கிட்ட பேச தான் போறேன்... நல்ல பொண்ணா உங்களுக்கு தெரிஞ்சிருந்தா கூட சொல்லுங்க...”
ஒரு வினாடி யோசித்த காமாட்சி, ரேவதியை பார்த்த படி, “நீ கத்திட்டு வந்தீயே அந்த நந்திதா கூட நல்ல பொண்ணு தான்... ஆனால் அவ துளசியோட க்ளாஸ்மேட்... உதயை விட பெரியவ,” என்றாள்.
ரேவதி சின்ன அதிர்வுடன் காமாட்சியை பார்த்தாள்...
“இதை நான் யோசிக்கவே இல்லையேக்கா... ஆனால் இந்த காலத்து பொண்ணுங்க அதை எல்லாம் யோசிக்குறாங்களா என்ன?”
“ரேவதி! திரும்ப நந்திதாவை பத்தி தப்பா பேசாதே... உனக்கு என்ன தெரியும்னு சொல்லு, நானே நந்திதாவை கூப்பிட்டு உன் முன்னாடியே நேரா கேட்கிறேன்... ஆனால் ஒரு பொண்ணை பத்தி இப்படி தப்பா தாறுமாறா பேசாதே... அது சரி இல்லை... உன்னை பத்தி எனக்கு தெரியும். பாசம்னு சொல்லி இன்னும் இன்னும் கீழே போகாதே...”
“சாரிக்கா... இனிமேல் பேசலை... என் மனசு சரியில்லை... நான் இப்படியே கிளம்புறேன்...”
காமாட்சியின் மனம் ரேவதிக்காக வருந்தியது. “மனசு சரியில்லைன்னு சொல்லிட்டு ஏன் வீட்டுக்கு போற... இரு... இருந்து கொஞ்சம் நேரம் பேசிட்டு போ,” என்றாள் அக்கறையுடன்.