மானசீக குருவாக மனதில் வைத்துக் கொண்டிருந்தான்.
அன்று அஸ்வதின் அறையை அவன் அடைந்த போது அஸ்வத்துடன் வேறு ஒருவரும் இருந்தார். ஆகாஷ் கேள்வியாக அஸ்வத்தை பார்த்தான்.
“கம் இன் ஆகாஷ். இவர் கைலாசமூர்த்தி. கே.ஆர் ஆர்கிடெக்ட்ஸ்ன்னு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி வச்சிருக்கார்,” என அங்கிருந்த புதிய நபரை ஆகாஷிற்கு அறிமுகம் செய்து வைத்த அஸ்வத், அதுபோலவே ஆகாஷை அவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார்.
இருவரும் கைகுலுக்கிக் கொள்ள, “உனக்காக தான் இவரை வெயிட் செய்ய சொன்னேன் ஆகாஷ். ரிமெம்பர் லாஸ்ட் டைம் நாம பார்த்தப்போ அந்த தாம்பரம் ஆஃபிஸ் பத்தி உன் கிட்ட சொன்னேன் ஞாபகம் இருக்கா? பெரிய பெரிய கம்பெனிஸ் கொடுத்த ப்ளான் எதுவுமே எனக்கு பிடிக்கவே இல்லை. இங்கே கைலாசமூர்த்தியோட டீம் போட்டுக் கொடுத்திருக்க ப்ளான் இது, பாரேன்,” என சொல்லி, மேஜை மீது விரித்து வைக்கப் பட்டிருந்த பெரிய வெள்ளை பேப்பரில் இருந்த கட்டிட பிளானை சுட்டிக் காண்பித்தார் அஸ்வத்.
அதை கவனமாக பார்த்தான் ஆகாஷ்.
“நல்லா ஸ்மார்ட்டா ப்ளான் செய்திருக்காங்களே! அந்த ப்ளாட் லெங்க்த் ஜாஸ்தி விட்த் கம்மி, அதை அழகா டாக்கில் செய்து, எல்லா ஸ்பேசையும் நல்ல விதமா யூஸ் செய்ற மாதிரியும் இருக்கே!”
“எக்சாக்ட்லி ஆகாஷ்! நானும் கூட இந்த ப்ளான் பார்த்து அசந்து தான் போயிட்டேன். நீ உன் மால்க்கு மல்டி லெவல் பார்க்கிங் கட்டுறதை பத்தி சொல்லிட்டு இருந்தீயே, அதுக்கு இவர் கம்பெனியை ரெகமன்ட் செய்யலாம்னு இவரை வெயிட் செய்ய சொன்னேன்.”
“நீங்க சொன்னா கட்டாயம் நல்லா தான் இருக்கும் அஸ்வத். ஷுயர், நான் மிஸ்டர் கைலாசமூர்த்தி கிட்ட பேசுறேன்.”
“தேங்க்ஸ் மிஸ்டர் ஆகாஷ்! எங்க கம்பெனியோட வேலை தரமானதா, அருமையா இருக்கும். அண்ட் தேங்க் யூ வெரி மச் மிஸ்டர் அஸ்வத்.”