(Reading time: 7 - 13 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

   

வாயெல்லாம் பல்லாக சொன்னார் கைலாசமூர்த்தி.

   

“நோ மென்ஷன் கைலாசம். எனக்கு வேலை நல்லா இருந்தா பிடிக்கும் அடுத்தவங்களுக்கும் ரெகமன்ட் செய்வேன். என்னை இம்ப்ரஸ் செய்தது போலவே ஆகாஷ்க்கும் நல்ல விதமா வேலையை முடிச்சு கொடுத்து என் பேரை காப்பாத்த வேண்டியது உங்க பொறுப்பு!”

   

“கட்டாயம் மிஸ்டர் அஸ்வத்!”

   

அவர்கள் இருவரின் பேச்சை கவனித்துக் கொண்டிருந்த ஆகாஷ் தன் விசிட்டிங் கார்டை எடுத்து கைலாசமூர்த்தியிடம் கொடுத்தான். 

   

“இது என்னோட ஆஃபிஸ் கார்ட் மிஸ்டர் கைலாசமூர்த்தி. உங்க ஆஃபிஸ்ல இருக்க பெஸ்ட் டேலன்டட் ஆர்கிடெக்ட் ஒருத்தங்களை என் ஆஃபிஸ்க்கு அனுப்பி வைங்க. நானே அந்த ஆர்கிடெக்டோட நேரா வொர்க் செய்வேன். மத்த பிஸ்னஸ் கான்ட்ராக்ட் டீடெயில்ஸ்க்கு என் கார்டுலேயே இருக்க லீகல் நம்பர்க்கு உங்க டீமை ஃபோன் செய்து பேச சொல்லுங்க. அஸ்வத் இந்த அளவுக்கு புகழனும்னா கட்டாயம் உங்க வேலை நல்லா தான் இருக்கும். அதனால தான் நார்மல் ப்ரோடோகால் ஃபாலோ செய்யாமல் உங்களை நேரா ஆர்கிடெக்ட் அனுப்ப சொல்றேன்.”

   

“தேங்க்ஸ் மிஸ்டர் ஆகாஷ். உங்க நம்பிக்கையையும் கட்டாயம் காப்பாத்துவோம்!”

   

கைலாசமூர்த்தி கிளம்பி சென்ற பிறகு அஸ்வத் ஆகாஷ் பக்கம் பார்த்தார்.

   

இளைய தலைமுறையை சேர்ந்தவனாக இருந்தாலும் எந்த வம்பு தும்புக்கும் போகாமல், கெட்ட பழக்கங்கள் இல்லாமல், முழு கவனத்துடன் தன் குறிக்கோளுக்காக உழைக்கும் ஆகாஷை அஸ்வதிற்கும் பிடிக்கும். தன்னுடைய டீன் ஏஜ் மகள் சற்றே பெரியவளாக இருந்திருந்தால் தனியாக மாப்பிளை தேடும் வேலை இல்லாமல் போயிருந்திருக்கும் என தன் மனைவியிடம் மட்டும் அல்லாமல் ஆகாஷின் தந்தை பிரகாஷிடம் கூட ஜாலியாக ஜோக் அடிக்கும் அளவிற்கு அவனின் குணநலன்கள் அவரை வசீகரித்திருந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.