Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 28 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
சம்யுக்தாவிற்கும் அவனே பரிமாறிவிட அவளும் சாப்பிடலானாள்.
வந்தவனோ சம்யுக்தாவிடம்
”ஏங்க நீங்களாவது அண்ணன்கிட்ட சொல்லி கொஞ்சம் அனுப்பி வைங்களேன்” என கேட்க அதற்கு தில்லையோ
”அவள் சொன்னாலும் நான் வெளிய வர்றதாயில்லை, கிளம்பு நிக்காத” என சொல்ல
அவனோ செல்லாமல் தில்லையிடம்
”அண்ணா வாண்ணா பாட்டி அர்ஜன்டா உன்னை கூட்டிட்டு வரச் சொல்லிச்சிண்ணா”
”அர்ஜன்டா என்னவாம் அவங்களுக்கு, அப்படி என்ன விசயம்”
”நேத்து இங்க நடந்த விசயம்லாம் சித்தன் பாட்டிகிட்ட சொல்லிட்டான், நீ எப்படியிருக்கேன்னு பார்க்க ஆசைப்படுது வாயேன்.
”அவன் இருக்கான் பாரு சரியான எட்டப்பன்டா, என்கூட இருந்துக்கிட்டே பாட்டிக்கு என்னை பத்தி சொல்லி வைப்பான், எங்க அவன்“
”அவன் இல்லை பாட்டிகிட்ட இருக்கான்”
”ஓஹோ சரி சரி சந்தோஷம் நான் நல்லாயிருக்கேன், எனக்கொன்னும் ஆகலைன்னு பாட்டிகிட்ட நீயே சொல்லிடு, இப்ப கிளம்பு”
”அண்ணா இப்ப நீ வர்றியா இல்லையா” என அதட்ட அவனோ
”என்னடா மிரட்டற”