(Reading time: 6 - 12 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

”உனக்காக என் வீட்டு சாம்பார் எல்லாம் கொடுத்திருக்கேன், அதுக்காகவாவது வாயேன்”

   

“என்னடா சாம்பார் இது நேத்து வைச்சதா என்ன, நல்லாவேயில்லை இதுக்காக உன் பேச்சை நான் கேட்கனுமா முடியாதுடா” என சொல்ல அவனோ 

   

”அண்ணா” என கத்த

   

”வர வர என் மேல எவனுக்குமே பயம் இல்லை, இப்படி மிரட்டினா நான் வரமாட்டேன், பாட்டி என்னை பார்க்கனுமா பேசாம என்னை இப்படியே போட்டோ எடுத்து அவங்களுக்கு காட்டு, எனக்கு காயம் எல்லாம் சரியானதும் நான் அவங்களை வந்து பார்க்கிறேன்”

   

”உன்னை இந்த கோலத்தில போட்டோ எடுக்கனுமா நல்லாயிருக்காதுண்ணா”

   

“ஏன்டா குளிச்சி முடிச்சி ப்ரஷா அழகா இருக்கேன், போட்டோல சூப்பரா வருவேன் நீ எடு“ என சொல்ல அவனோ அலுத்துக் கொள்ள சம்யுக்தாவோ இருவரின் பேச்சைக் கேட்டு சிரித்தபடியே சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அவளின் முகமகிழ்ச்சியைக் கண்ட தில்லையும் அக மகிழ்ந்தான். அவனது மகிழ்ச்சியைக் கண்டவனோ

   

“அண்ணா வாண்ணா” என பாசமாக அழைக்க அவனோ 

   

”நான் வந்தா இவளும் வருவாடா பாட்டி எங்களை பார்த்தா சந்தேகப்படுவாங்க”

   

”அது உன் பிரச்சனை, நீயே பாட்டிகிட்ட இவங்களை பத்தி சொல்லி சமாளிச்சிடு” என சொல்ல அவனும் வேறு வழியில்லாமல்

   

”சரிடா சரிடா வரேன் போதுமா சாப்பிட விடு” என சொன்னதும் உடனே அவன் மகிழ்ச்சியாக வெளியே சென்றான்.

   

அவன் சென்றதும் தில்லையும் சாப்பிட்டு முடித்து வேறு உடைக்கு மாறினான். சம்யுக்தாவும் அவசரமாக சாப்பிட்டுவிட்டு அவனிடம் வந்து நின்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.