அவளைப் பார்த்து அலறினான்
”ப்ச் நான் பாட்டியை பார்க்கப் போறேன், நீ எதுக்கு நீயும் வந்தா பாட்டி சந்தேகப்படும்”
”பாட்டியை பார்த்து பயப்படறீங்களே, அதனால நான் அவங்ககிட்டயே என் கதையை சொல்லி நியாயம் கேட்கறேன்”
”சே உன்னை வைச்சிக்கிட்டு எதையுமே பேச முடியாது, இதப்பாரு நீ வராத நானே வந்துடுவேன்”
”முடியாது நானும் வருவேன்” என பிடிவாதம் பிடிக்க அவனோ
”ஆமா கையில எப்பவும் தாலி வைச்சிருப்பியே எங்க அது” என கேட்க அவளோ இடுப்பில் சொருகியிருந்த தாலியை அவனிடம் எடுத்துக் காட்டினாள்
”ஆஹா சூப்பர் இப்படியே வந்து பாட்டிகிட்ட நின்னுடாதம்மா, என் பாட்டி டேன்ஜரானவங்க, எதையும் யோசிக்காம தப்பான முடிவெடுப்பாங்க, இந்த தாலி வேணா இங்க இருக்கட்டும் இதுக்கு பாதுகாப்பா நீயும் இங்கயே இரு, நான் போய்ட்டு வந்துடறேன்” என சொல்ல அவளோ முறைத்தாள்
”முறைக்காத வந்து தொலை” என திட்டியபடியே அவளை அழைத்துக் கொண்டு ஜீப்பில் ஏறினான்.
அவளும் ஏறிக் கொண்டதும் வண்டியை கிளப்பினான்.
வண்டியும் சென்றது. இருவரும் பேசிக் கொள்ளவேயில்லை 1 மணி நேரமாகியும் பாட்டி வீடு வராமல் போகவே சம்யுக்தா சந்தேகப்பட்டாள். அக்கம் பக்கம் சுற்றிப் பார்த்தாள். வெட்டவெளியாக இருக்கவே பயந்துவிட்டாள்