”ஏய் என்னை கூட்டிக்கிட்டு எங்கப் போற“
”பாட்டி வீட்டுக்கு”
”பொய் 1 மணி நேரமாகுது இன்னுமா உன் பாட்டி வீடு வரலை, இல்லை நீ என்னவோ பண்ணப் போற, இந்த இடமே வெட்ட வெளியா இருக்கு, இங்க வைச்சி யாரை கொல்லப் போற உன் எதிரியையா இல்லை என்னையா சொல்லு, என்னை கொல்லத்தான் இப்படி நாடகமாடி கூட்டிட்டு வந்தியா, இதான் உன்னோட நியாயமா இது தப்பு நான் ஒத்துக்கமாட்டேன்” என அவள் அலற அவனோ
”நான் ஏன் பொய் சொல்லனும், பாட்டி வீட்டுக்குதான் போறேன் என்ன ஊரை சுத்திக்கிட்டு போறேன், ஊருக்குள்ள என் எதிரிங்க இருக்கானுங்க, அவங்க கண்ல படக்கூடாதுன்னு இப்படி வெட்டவெளி பாதையில போறேன், இன்னும் கொஞ்சம் தூரம்தான் வீடு வந்துடும் பேசாம இரு“
”இல்லை எனக்குப் புரிஞ்சிடுச்சி, உனக்கு இப்ப நான் தொல்லையா தெரியறேன், உன்னால எனக்கு நியாயம் வழங்க முடியாததால என்னை கொல்ல நினைக்கற, என்னை கொன்னா உனக்கு பாவம் வந்து சேர்ந்துடும், சொன்னாக்கேளு வண்டியை நிறுத்து” என அவனது தோளில் காயம்பட்ட இடத்தில் அடிக்க வலி தாங்க முடியாமல் அவனோ வண்டியை ஓட்ட முடியாமல் சட்டென நிப்பாட்டினான்
”சும்மாயிருக்க மாட்ட” என அவன் அவள் மீது கையை ஓங்கிவிட்டானே தவிர அடிக்கவில்லை அவளோ பயந்துவிட்டாள்
”பாவி நியாயம் கேட்டு வந்த என்னை அடிச்சே கொல்ல முடிவு பண்ணிட்டல்ல ஏன் நிறுத்திட்ட அடி நல்லா அடி அடிச்சி என்னைக் கொன்னுடு, உனக்குதான் கொல்றதுன்னா கைவந்த கலையாச்சே, என்னை கொன்னு இங்கயே புதைச்சிடு அப்புறம் நான் தலைமறைவாயிட்டேன்னு உலகத்துக்கு சொல்லிடு போதுமா இப்ப உனக்கு சந்தோஷம்தானே” என அவள் திட்ட அவனோ அடிக்க முடியாமல் அடங்கிப் போனான் ஆனால் அவளின் பேச்சைக் கேட்டு கோபம் கொண்டான்.