“சாப்பிடாம இருந்தா மனசு சரியாகிடுமா? இங்கே பார் நந்திதா, நீ படிச்சவ, உலகத்தை பத்தி தெரிஞ்சு வச்சிருக்கிறவ... உனக்கு நான் சொல்லனும்னு இல்லை... நீ செய்யாத ஒரு விஷயத்தை யார் எவ்வளவு அடிச்சு பேசினாலும் உண்மையாகிடாது... ரேவதி பேசினதை பத்தி எல்லாம் யோசிக்காமல் சாப்பிடு...”
நந்திதா உதட்டை கடித்துக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தாள்...
“ரேவதியை வேணா மன்னிப்பு கேட்க சொல்லட்டுமா??? சொல்லு...”
“மன்னிப்பா?” நந்திதா அதிர்ச்சியோடு கேட்க, துளசி,
“ஆமாம் கேட்க சொல்லுங்கன்னு சொல்லேன் நந்து,” என்று தோழிக்கு ஆலோசனை வழங்கினாள்.
“சும்மா இரு துளசி... ஆன்ட்டி, மன்னிப்பு எல்லாம் வேண்டாம்... அவங்க அப்படி தப்பா நினைக்குற மாதிரி என்ன செய்தேன்னு தான் புரியலை... ஏதோ செய்திருக்கேன்னு மட்டும் புரியுது,” என்றாள் நந்திதா குழப்பத்துடன்!
“நீ தப்பே செஞ்சிருந்தாலும் என்ன எதுன்னு கேட்கலாமே தவிர ரேவதி பேசினது சரியில்லை... உதய் கிட்ட வேணா அவ அப்படி கோபப்படலாம்... உன் கிட்ட அப்படி நடந்துக்கிட்டது தப்பு தான்... சரி அதை விடு, அதுக்காக எல்லாம் இப்படி சாப்பிடாமல் இருப்பீயா?”
“இல்லை ஆன்ட்டி பசிக்கலை...”
“நந்திதா... நான் சொல்றேன்ல எனக்காகவாவது சாப்பிடு...”
“இல்....”
“நான் சொன்னால் பொதுவா எல்லோரும் கேட்பாங்க.... நீயும்...”