Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 29 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தில்லையோ தனது வண்டியை இடித்த வண்டியில் இருந்தவர்களைக் கண்டான்.
”யார்டா நீங்க” என கேட்க அவர்களோ அவனையே கொல்ல வண்டியை ஓட்டிக் கொண்டு வர அவர்களது திட்டத்தை புரிந்துக் கொண்டவன், அந்த வெட்டவெளியில் இருந்த பெரிய கல்லை எடுத்து எதிரே வந்த வண்டியின் முன்பக்க கண்ணாடியில் குறிபார்த்து தூக்கி எறிந்தான். அதுவும் சரியாக சென்று முன்பக்க கண்ணாடியை உடைத்துவிட டிரைவரால் அந்த வண்டியை சரியாக ஓட்ட முடியாமல் நிலை தடுமாறினான். அதில் அந்த வண்டியும் நிலை தடுமாறி 3 முறை பல்டி அடித்து தலைகீழாக விழுந்து நொறுங்கியது, அதில் இருந்த ஆட்களும் அய்யோ அம்மா என வலியில் முனகவே அவ்விடம் சென்றான் தில்லை. உள்ளிருந்தவர்களை பார்த்தான்
”யார்டா நீங்க கருணாவோட ஆளுங்களா சொல்லுங்கடா இல்லை சுட்டுடுவேன்” என தனது கையில் துப்பாக்கியை வைத்து மிரட்டினான் தில்லை
”இல்லை கஜாவோட ஆளுங்க, எப்படியும் கருணாவுக்கு அடுத்து அவன் தம்பி கஜாவைதானே நீ கொல்லுவ அதனால அதுக்கு முன்னாடி உன்னை கொல்லச் சொல்லி எங்களை அனுப்பினாங்க” என ஒருவன் பயத்தில் உளறவே தில்லையோ
”கஜாவா அவன் யாரு புதுசா இருக்கே“ என யோசித்தபடியே அந்த காரில் இருந்தவர்களை வெளியே இழுத்தான். ஒவ்வொருவராக வெளியே வந்தார்கள், வந்தவர்கள் உடனே தங்களை சரிசெய்துக் கொண்டு தில்லையின் மீது தாக்குதல் புரிய அவனும் வலியை பொறுத்துக் கொண்டு அவர்களுடன் சண்டையிட்டான். இதில் வந்திருந்த மூவரும் அடிபட்டு விழுந்தார்கள் அவனோ ஒருத்தனைப் பிடித்து
”கஜா யாரு சொல்லு”
”கருணாகரனோட தம்பி”
”அவனுக்கு தம்பியில்லையே, தங்கச்சிதானே பேரு கூட கஜலட்சுமின்னு கேள்விப்பட்டேன்”
”அது பொய் தம்பியை காப்பாத்த நினைச்சி அப்படி பொண்ணு பேரை வைச்சி