(Reading time: 7 - 14 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

பத்திரப்படுத்தினாரு”

   

”ஓஹோ அப்ப கஜா எங்கிருக்கான்”

   

”உனக்காக காத்திருக்கான், உன்னை கொல்லனும்னு துடிக்கிறான்“

   

”அவனை இங்க வரச் சொல்லு, நான் இங்கதான் இருக்கேன் முடிஞ்சா இங்க வந்து என்னை கொல்லச் சொல்லு சீக்கிரம்” என சொல்ல அவர்களோ உடனே போன் மூலம் கஜாவிற்கு தொடர்பு கொண்டு பேசினார்கள்.

   

தில்லையோ சம்யுக்தாவை அழைத்து தனது ஜீப்பில் ஏற்றினான்

   

”உள்ளயே இரு வெளிய வராத”

   

”அப்ப நீ கஜாவையும் கொல்லப்போறியா“

   

”என்னைக் காப்பாத்திக்க நான் என்ன வேணும்னாலும் செய்வேன்” என சொல்லியவன் கஜாவிற்காக காத்திருந்தான், காத்திருக்கும் நேரத்தில் பிடிபட்ட மூவருக்கும் ஒரு வேலையைக் கொடுத்தான். அந்த வெட்டவெளியில் ஆழமாக குழி தோண்டச் சொன்னான். அதற்கு தேவைப்படும் பொருட்களை அவனது ஜீப்பில் இருந்தே எடுத்துக் கொடுத்தான். அவர்களோ 

   

”எதுக்கு குழி வெட்டனும்” என கேட்க அவனோ

   

”ஒண்ணு நான் கஜாவை கொல்லனும் இல்லை அவன் என்னை கொல்லனும், எங்கள்ல எவன் செத்தாலும் அவனை இங்கயே அடக்கம் செய்யனும், அதுக்குதான் குழியை வெட்டச் சொல்றேன் சீக்கிரமா வெட்டுங்க” என சொல்ல அவர்களும் எப்படியும் தில்லைதான் சாவான் என நினைத்தார்கள், காரணம் அவனுக்கு பலமாக அடிபட்டிருந்தது இந்த நிலைமையில் அவனால் எதையும் செய்ய முடியாது என நினைத்து உற்சாகமாக குழியை வெட்டினார்கள். அவர்களது செயலைக் கண்ட சம்யுக்தாவோ தில்லையிடம்

   

”இது ஆபத்தானது” என்றாள்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.