(Reading time: 6 - 11 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 03 - பிந்து வினோத்

   

This is a Chillzee Originals - Princess Novel episode.
- Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

- Visit Chillzee Princess Novels page for other current Chillzee Princess stories.

  

கலாவின் அமைதிக்கான காரணத்தை பற்றி யோசித்துக் கொண்டே, “எதுவா இருந்தாலும் ஃப்ரீயா சொல்லு கலா,” என்றாள் சாரதா.

   

“ரோஹினி வெளி உலகம் தெரியாம வளர்ந்த பொண்ணுக்கா. அவ தங்கி இருக்க பாதுகாப்பான இடம் வேணும். அவளை நல்லபடியா பார்த்துக்க அன்பான ஒருத்தங்க வேணும்.”

   

“என் வீட்டுக்கு உன் ராஜக்குமாரியை அனுப்பி வைக்கலாம்னு யோசிக்குறேன்னு ஷார்ட்டா சொல்லு...”

   

“அது.... வந்து... ஆமாம்க்கா... ரோஹினி ஒரு ஆறு ஏழு மாசம் உங்க வீட்டில தங்கினா உங்களுக்கு பரவாயில்லையா?”

   

“என்ன கேள்வி இது கலா? எத்தனை தடவை சொல்லி இருக்கேன், இது உன் சொந்த வீடு போலன்னு... “

   

“ஹப்பா! தேங்க்ஸ்க்கா... அப்புறம், நீங்க சில விஷயங்களை மனசில வச்சுக்கனும்...”

   

“என்ன?”

   

“ரோஹினி யாரு, என்னங்குறது வெளியே யாருக்கும் தெரிய வேண்டாம்... அஜய், விஜய் உட்பட!”

   

“சரி... நான் சொல்லலை...”

   

“அப்புறம், ரோஹினி இளவரசி! அதாவது...” கலா மிகுந்த தயக்கத்துடன் இழுத்தாள்!

   

அவள் சொல்ல வருவதை புரிந்துக் கொண்டவளாக, “எனக்கே புரியுது கலா! கவலைப்படாதே... அவளோட அரண்மனை மாதிரி நாங்க பெரிய வீட்டுல இல்லைனாலும் பெரிய மனசை வச்சிருக்கோம், அவளை நல்லபடியா பத்திரமா பார்த்துப்போம்,” என்றாள் சாரதா

   

“நீங்க எப்படி பார்துப்பீங்கன்னு எனக்கு தெரியும்க்கா... ஆனால் ரோஹினி ஏதாவது சொல்லி, 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.