“ஆமாம்,” என்றாள் சாரதா.
கண்களில் கேள்வியுடன் அவளை பார்த்தாள் நிரஞ்சனா.
நிரஞ்சனாவின் கேள்வி பொதிந்த பார்வை சாரதாவை சிரிக்க வைத்தது.
“இப்போ எதுக்கு நீ என்னை இப்படி பார்க்குற?”
“நீங்க ஹை-ஃபை அம்மான்னு தெரியும்... ஆனாலும் எல்லா பொண்ணையும் வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்ற உங்க மூத்த மகன் அஜய்க்காக இப்படி எல்லாம் செய்வீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை!!!!”
“கொழுப்பு தானே உனக்கு...” என்று சொல்லியபடி, வலிக்காமல் அவளின் காதை திருகிய சாரதா,
“நீ சொல்ற மாதிரி செய்யலாம்னு எனக்கும் கூட ஆசை தான் நிரு... ஆனா இந்த விஷயத்துல மூத்தவனை விட மோசமா இருந்த விஜய்க்கே உன்னை மாதிரி ஒரு ரவுடி காதலி கிடைச்சிருக்கும் போது, மூத்தவனுக்கு அவனுக்கு ஏத்த மாதிரி ஒருத்தி வராமலா போயிடுவான்னு விட்டுட்டேன்,” என்று சொல்லிவிட்டு சிரித்தாள் சாரதா.
“ப்ச்... போங்க அத்தை! அதெல்லாம் எந்த காலத்தில் நடக்க போகுது,” என்று அலுத்துக் கொண்டாள் நிரஞ்சனா.
சரியாக அதே நேரம், “அம்மா...” என்று அழைத்தப் படி கேட்டை திறந்து உள்ளே நுழைந்தான் அவன்!
‘பூவெல்லாம் உன் வாசம்’ அஜித்தை நினைவுப்படுத்தும் தோற்றத்துடன் இருந்தவனை அலுப்புடன் பார்த்தாள் நிரஞ்சனா!
சாரதாவோ முகம் மலர அவனை வரவேற்றாள்.