(Reading time: 6 - 11 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

உங்க மனசு வருத்தப் பட்டுறக் கூடாதே...”

   

“என் மனசெல்லாம் அப்படி வருத்தப் படுற மனசில்லைன்னு உனக்கே தெரியும்... அதிகமா யோசிக்காம அவளை அனுப்பி வை. நான் பார்த்துக்குறேன்.”

   

“சரிக்கா! ரோஹினி எந்த ஃப்ளைட்ல வரான்னு விபரங்களை சீக்கிரமே உங்களுக்கு சொல்றேன்...”

   

ஃபோனை கட் செய்து வைத்த சாரதா, ரோஹினிக்காக தான் செய்ய வேண்டியவற்றைப் பற்றி யோசித்தாள். வருபவள் ஒரு தீவின் ராஜக்குமாரி என்பதோ, பணம் படைத்தவள் என்பதோ சாரதாவை அசர வைக்கவில்லை! எப்போதும் போல ஈஸியாக யோசித்தப்படி திட்டமிட்டவள், மேஜை மீதிருந்த அலார்ம் கிளாக்கை பார்த்தாள்.

   

மணி நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது.

   

நிரஞ்சனா வரும் நேரமாகிவிட்டதே என அவசரமாக சமையலறைக்கு சென்று பாலை ஸ்டவ்வில் வைத்து டீ தயாரிக்கும் வேலையில் ஈடுப்பட்டாள்.

   

ஐந்து நிமிடத்தில் அழைப்பு மணி ஓசைக் கேட்டது.

   

எட்டிப் பார்த்தால் நிரஞ்சனா தான் நின்றிருந்தாள். பச்சை நிற சேலையில் பளிச்சென்று இருந்தாள்!

   

க்ரில் கதவை அவளுக்காக திறந்து விட்டாள் சாரதா.

   

உள்ளே நுழையும் முன்பே, “அத்தை, ரொம்ப டையர்ட்!!!! எங்கே என் டீ,” என்றாள் நிரஞ்சனா.

   

“டீச்சரா இருந்துட்டு உனக்கு நல்லதை சொல்லிக் கொடுக்க நான் கஷ்டப் பட வேண்டி இருக்கு. முதல்ல போய் முகத்தை கழுவிட்டு வா...”

   

“டீ குடிச்சிட்டு கழுவுறேன் அத்தை...”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.