(Reading time: 6 - 11 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

   

“வா அஜய்! வெள்ளி தான் வருவேன்னு சொன்ன? அதிசயமா சீக்கிரம் வந்திருக்க... வா வா... உனக்கும் டீ போடுறேன்...”

   

“அதெல்லாம் வேண்டாம்மா. மத்தியான ட்ரெயின்லயே சீட் கிடைச்சது, அதனால அதிலேயே கிளம்பிட்டேன்... ரொம்ப டையர்டா இருக்கு. தூங்கப் போறேன்... எழுந்து நைட் உங்க சமையலை ஒரு வெட்டு வெட்டுறேன்,” என்றவன், நிரஞ்சனா பக்கம் பார்த்து,

   

“க்ளாக் வேலை செய்யுதோ இல்லையோ, நீ ஓசி டீக்கு தினமும் கரக்ட்டா ஆஜர் ஆகிடுற நிரஞ்சனா,” என்றான்.

   

நிரஞ்சனா அவனுக்கு பதில் சொல்ல தொடங்கும் முன்பே கையில் இருந்த duffle bag உடன் உள்ளே சென்று மறைந்தான்.

   

அவன் சென்ற பக்கமே பார்த்து முறைத்துக் கொண்டிருந்தாள் நிரஞ்சனா.

   

“அவனை பத்தி தெரியுமே விடு நிரஞ்சனா,” என்று அவளை தேற்ற முயன்றாள் சாரதா.

   

“இல்லை அத்தை, இது சரி இல்லை! நான் என்ன நினைக்குறேன்னா ஹாஸ்பிட்டல்ல யாரோட குழந்தையையோ உங்களுக்கு மாத்தி கொடுத்திட்டாங்க... இவரு உங்க மகனா இருக்க சான்ஸே இல்ல!”

   

“அடி!! அவன் அவங்க அப்பா மாதிரி!”

   

“ஹுஹும், மாமா இப்படி முசுடா இருந்திருந்தா நீங்க எப்படி அவரை கல்யாணம் செய்திருப்பீங்க?”

   

“வாயாடி!!! அவரும் முசுடு இல்லை, என் மகனும் முசுடு இல்லை!”

   

“மாமாவை பத்தி சின்னதா ஏதாவது சொன்னா கூட, உடனே பொங்கி எழுந்திருவீங்களே!!! அவர் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.