“ஹுஹும் அதெல்லாம் முடியாது!”
“இருங்க, இருங்க உங்க பையனை கல்யாணம் செய்தப்புறம் உங்க கண்ணுல விரலை விட்டு ஆட்டுறேன்!!!!!”
“நீ தானே!!!! க்கும்...!!! அதை அப்புறமா பார்க்கலாம்... இப்போ போய் முகம், கையெல்லாம் வாஷ் செய்துட்டு வா... உனக்காக டீ மட்டும் இல்லை, முறுக்கும் வச்சிருக்கேன்.”
சினுங்கியப் படி சென்றாள் நிரஞ்சனா.
அவள் வரும் முன் அவளுக்காக டீ, முறுக்கு அனைத்தையும் தயாராக எடுத்து வைத்தாள் சாரதா.
சாரதா பக்கத்தில் அமர்ந்து தேநீரை பருகிய நிரஞ்சனா,
“உங்க டீ இஸ் தி சீக்ரட் ஆஃப் மை எனர்ஜி அத்தை... என்ன ஸ்ட்ராங், என்ன டேஸ்ட்,” என்றாள் உற்சாகத்துடன்.
“போதும், போதும் ஐஸ் வச்சது... இன்னைக்கு எனக்கு எக்ஸ்ட்ரா வேலை இருக்கு... சீக்கிரமா குடிச்சு முடி...”
“அது என்ன? அப்படி என்னை விட முக்கியமான வேலை?”
“அந்த லாஸ்ட் ரூமுல கோடவுன் மாதிரி எல்லா பொருளையும் போட்டு அடைச்சு வச்சிருக்கேன். அதை கிளீன் செய்யனும்...”
“ஏன் எதுக்கு கிளீன் செய்ய போறீங்க?”
“வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வர போறா...”
“வரப் போறான்னா சொன்னீங்க??? பொண்ணா வரப் போறா???”