”ப்ச் நீ சும்மாயிரு உனக்கென்ன நியாயம்தானே வேணும், நான் தரேன் அமைதியா இரு“
“எப்படி உனக்கு நீயே குழிவெட்டிக்கிறியே“
”ஏன் நான் சண்டை போட்டு ஜெயிக்க மாட்டேன், செத்துடுவேன்னு நினைக்கிறியா”
”உன் உடம்பு மோசமா இருக்கே, இந்த நிலைமையில எப்படி நீ சண்டை போடுவ அதை விட இப்பவே கிளம்பு வா போலாம்”
“கோழை மாதிரி ஓடச் சொல்றியா, நான் வீரன் என்னவோ சொன்னியே வீரனா இருந்து சண்டை போட்டு சாகனும்னு, எனக்கு சாக விருப்பமில்லை ஆனா, சண்டை போட விருப்பமிருக்கு, உடம்புல தெம்பு இல்லைன்னா என்ன மனசுல உறுதியிருக்கு கண்டிப்பா நான் சாகமாட்டேன், அதுலயும் உனக்கு நியாயம் வழங்காம நான் சாகமாட்டேன் சரியா கவலைப்படாம நிம்மதியா உள்ளயே இரு”
”எனக்கு ஏதாவது ஆச்சின்னா”
“ஒண்ணும் ஆகாது என் ஆளுங்களை வரச் சொல்லியிருக்கேன், எனக்கு ஏதாவது ஆச்சின்னா அவங்க உன்னை கூட்டிட்டு போயிடுவாங்க”
”ஓஹோ அதானே பார்த்தேன் ஆக உன் ஆளுங்க துணையோடுதான் நீ இப்ப சண்டை போடப்போறியா”
“என் ஆளுங்க வர்றதுக்கு எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும், அவங்க வர்றதுக்குள்ள இங்க சம்பவமே நடந்து முடிஞ்சிடும், அதோ பாரு வண்டி வருது, அது கருணாவோட வண்டி கண்டிப்பா அதுல கஜா இருப்பான், அவனை நான் பார்த்துக்கறேன், அவன் கண்ல படாம நீயிரு அப்புறம் என் மேல இருக்கற கோபத்தில உன்னை ஏதாவது செஞ்சிடப் போறான் சீட்ல படுத்துக்க” என சொல்ல அவளும் அதே போல செய்தாள் ஆனாலும் அடிக்கடி தலையை மட்டும் தூக்கி வெளியே என்ன நடக்கிறது என பார்க்கலானாள்.