Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 14 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ஃபோனின் டிஸ்ப்லேவைப் பார்த்த ஆகாஷ், அக்ஷராவிடம் இருந்து அழைப்பு வருவது புரிந்து, உடனே அழைப்பை ஏற்று ஃபோனை காதில் வைத்தான்...
அவன் ஹலோ என்று சொல்ல வாயை திறக்கும் முன்,
“அஷ்.... அஷ்... சீக்கிரம் வாடா.... ஐ ஆம் இன் ட்ரபிள்... என் லோகேஷன் உனக்கு அனுப்பி இருக்கேன்,” என்று தடுமாற்றத்துடன் ஒலித்த அக்ஷ்ராவின் குரல் மறுப்பக்கம் இருந்து கேட்டது.
அடுத்த ஐந்தாவது நிமிடம் அக்ஷ்ரா சொன்ன இடத்தில் இருந்தான் ஆகாஷ்!
ஆகாஷை பார்த்த உடன் ஓடி வந்து அவனை கட்டி அணைத்துக் கொண்டாள் அக்ஷரா!
ஆகாஷ் அவளை விலக்காமல், அவளிடம் கேள்வி எதுவும் கேட்காமல், அங்கிருந்தவர்களை தன் கூர்மையான விழிகளால் ஆராய்ந்தான்!
ஐந்து இளைஞர்கள் அங்கே நின்றிருந்தார்கள்! ஆகாஷை பார்த்து அதிர்ச்சியோ கலக்கமோ கொள்ளாமல் நக்கலாக நோட்டமிட்டுக் கொண்டிருந்தார்கள்!
பக்கத்தில் பெரிய ஃபிளாட்கள் இருந்தாலும், புல்வெளி நிறைந்த அந்த இடத்தில் வேறு மனிதர்கள் யாரும் கண்ணில் படவில்லை!
ஆகாஷ் நிலைமையை கணித்துக் கொண்டிருக்கும் போதே, “இது யாருடா இந்த அமுல் பேபி,” என்று அங்கு நின்றிருந்த இளைஞர்களில் ஒருவன் சொல்வது கேட்டது...!
ஆகாஷை இப்போதும் கட்டிக் கொண்டு நின்றிருந்த அக்ஷரா, அசையாமலே, “அஷ், நான் இந்த க்ராஸ்ல இருந்த பட்டாம்பூச்சியை ஃபோட்டோ க்ளிக் செய்துட்டு இருந்தேன்... அந்த பசங்க ஏதேதோ பேசிட்டு இருந்தாங்க... நான் கண்டுக்காம என் வேலையை செய்துட்டு இருந்தா, விடாம டீஸ் செய்துட்டே இருந்தாங்க... திடீர்னு ஒருத்தன் பக்கத்துல வந்து தொட்டு பேச ஆரம்பிச்சிட்டான்... கோபத்தில அவனை அடிச்சிட்டேன் அஷ்... இப்போ ஏதேதோ சொல்றாங்க,