பயமா இருக்கு,” என்றாள்!
“அக்ஷரா! ரிலாக்ஸ்... நீ செஞ்சது சரி தான்... காம் டவுன்... நான் தான் வந்துட்டேனே...!”
ஆகாஷ் அக்ஷ்ராவிடம் சொல்ல, அந்த கூட்டத்தில் இருந்த ஒருவன்,
“அடடா ஹீரோ வந்துட்டாராம்ப்பா!!!! எல்லோரும் பயந்து நடுங்குங்க,” என்று கிண்டலாக சொல்ல, மற்றவர்கள் சிரித்தார்கள்!
“அஷ், எனக்கு ரொம்ப பயமா இருக்கு,” என மீண்டும் அக்ஷரா சொன்ன நேரம், ஒரு பைக் அவர்களை உரசிக் கொண்டு வந்து நின்றது!
பைக்கில் இருந்து இறங்கிய உயரமான இளைஞன் ஒருவன், ஆகாஷிடம்,
“என்ன ஆச்சு மிஸ்டர் ஆகாஷ்? முடிஞ்ச அளவு சீக்கிரமா வந்தேன்... இஸ் ஷீ ஆல்ரைட்?” என்று கேள்விகளை அடுக்கினான்.
“ஷீ இஸ் ஓகே ஜெய். இவங்க தான் அக்ஷராவை தொல்லை செய்தவங்க,” என்று அங்கிருந்த கும்பல் பக்கம் ஆகாஷ் கை காட்ட, ஜெய் முறைத்தபடி அவர்களை நோக்கி இரண்டு அடிகள் எடுத்து வைத்தான். பின்பு ஏதோ நினைத்தவனாக,
“நீங்க இரண்டுப் பேரும் கிளம்புங்க ஆகாஷ்... இவங்களை நான் பார்த்துக்குறேன்,” என்றான்.
மறுக்காமல், திரும்பியும் பார்க்காமல் அக்ஷராவை அழைத்துக் கொண்டு தன் காரில் கிளம்பினான் ஆகாஷ்.
கார் சிறிது தூரம் சென்ற பிறகே இயல்புக்கு திரும்பி ஆகாஷை விட்டு விலகி அமர்ந்தாள் அக்ஷ்ரா!
“ஜெய் என் கம்பெனிக்கு செக்யூரிட்டி சர்வீஸ் கொடுக்குறவர்! இதுக்கு மேல நீ பயப்பட எதுவும் இல்லை அக்ஷ்ரா,” என்று சொல்லி அவளை தேற்றினான் ஆகாஷ்.