“தேங்க்ஸ் அஷ்! நீ கிளம்பி வரும் போதே அவருக்கு சொன்னீயாடா? கரக்ட்டா வந்தாரே???”
“ஹ்ம்ம்... உன் வாய்ஸ்ல நடுக்கம் இருந்துச்சு... என்னவோ விஷயம்னு புரிஞ்சுச்சு...! அதான் எதுக்கும் ஜெய்யை வர சொன்னேன்... நீ ஏன் அக்ஷரா தனியா வந்த? அங்கிள்ட்ட சொன்னா உனக்கு செக்யூரிட்டி அரேன்ஜ் செஞ்சு தருவாரே?”
“ஐயோ நீ வேற அஷ்! அப்புறம் அம்மா என்னை வெளியே விடவே மாட்டாங்க... இப்போவே கல்யாணம் ஃபிக்ஸ் ஆயிடுச்சு, நீ ஊரு சுத்திட்டு இருக்கேன்னு திட்டிட்டு இருக்காங்க... எப்போவும் ரேம்போ என் கூட இருப்பான்... இப்போ அவன் ஒரு காம்படிஷன் போயிருக்கான், அதான் தனியா வர வேண்டியதா போச்சு.... ச்சே...”
கார் ட்ராஃபிக் சிக்னலில் நின்றிருக்கவே, அக்ஷ்ரா சொன்னதை கேட்டபடி ஃபோனில் யாருக்கோ மெசேஜ் அனுப்பி வைத்தான் ஆகாஷ்.
மீண்டும் பச்சை சிக்னல் வரவும் காரை கிளப்பியவன்,
“இப்போ ஓகேவா ஃபீல் செய்றீயா? உன்னை உன் வீட்டுல ட்ராப் செய்யவா இல்லை என் வீட்டுக்கு வரீயா? அம்மா கூட பேசினா உனக்கு கொஞ்சம் நல்லா இருக்கும்,” என்று அவளிடம் விசாரித்தான்.
“என் ஸ்வீட்ஹார்ட் கிட்ட பேசினா எப்போவுமே நல்லா தான் இருக்கும்... ஆனால் அவங்களுக்கும் இப்போ நடந்தது தெரிய வேண்டாம் அஷ்... அவங்க வழியா அம்மாக்கு விஷயம் தெரிஞ்சது, அவ்வளவு தான்... ப்ளீஸ் எதுவும் சொல்லாதே...”
“சரி, நான் சொல்லலை... ஆனால் நான் சொல்றதை நீ கேட்கனும்...”
“என்ன கேக்கனும்?”
“இரு உன் வீட்டுக்கு போனதும் சொல்றேன்...”