கேள்வியுடன் பார்த்ததை தவிர அக்ஷரா வேறு எதுவும் கேட்கவில்லை! ஆகாஷ் மீது அவளுக்கு முழு நம்பிக்கை இருந்தது!
அக்ஷ்ராவின் வீட்டிற்கு அவர்கள் இருவரும் வந்து சேர்ந்தப் போது, அந்த வீட்டின் முன் இருந்த பெரிய கேட்டின் பக்கத்தில் பைக்கில் சாய்ந்த படி ஒரு இளைஞன் நின்றிருந்தான்! ஆகாஷ் காரில் இருந்து எட்டிப் பார்க்கவும், அந்த பைக் இளைஞன் காரின் அருகே ஓடி வந்தான். தன்னுடைய ஐ.டியை ஆகாஷிடம் காட்டி விட்டு,
“ஜெய் சார் அனுப்பினார் சார்,” என்றான்.
“குட்! இவங்க தான் அக்ஷ்ரா! இன்னைல இருந்து நீ அவங்களோட பாடி கார்ட்,” என்றான் ஆகாஷ்.
✽✽✽
“நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்... வீட்டுக்கு வரதுக்கு முன்னாடியே பாடிகார்டா இருக்க ஆள் ரெடி செய்து வச்சிருக்கான்! அமேஸிங், ரைட்? அது மட்டுமில்லை... அம்மா கிட்ட பேசி பாடிகார்ட் இருக்கார்ன்னு சொல்லி, இனிமேல் என்னை ஃப்ரீயா எங்கேயும் அனுப்பலாம்னு வேற சொல்லிட்டான்... ஹீ இஸ் ஸோ ஸ்வீட்!!!! எப்படி ப்ளான் செய்றான் பார்த்தீயா...”
அக்ஷரா விடாமல் பேசிக் கொண்டே போக, அகிலா கன்னத்தில் கை வைத்து அலுப்பான லுக் ஒன்றை கொடுத்துக் கொண்டிருந்தாள்! அக்ஷ்ராவுடன் வந்த புதியவன் யார் என்று தெரியாத்தனமாக அவள் கேட்ட சின்னஞ்சிறு கேள்விக்கு அக்ஷ்ரா non-stop ஆக ஆகாஷ் புகழ் பாடிக் கொண்டே போனால் அவள் வேறு என்ன செய்ய முடியும்!!!!!
அகிலாவை போல இல்லாமல், கணேஷ் யோசனையுடன் அக்ஷராவை பார்த்தப் படி அவள் சொல்வதைக் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான்!
ஒரு வழியாக அக்ஷரா பேசி முடிக்கவும்,