Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 16 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ஆகாஷின் மனதில் தோன்றிய எண்ணம் அவனுக்கு தனி உற்சாகத்தை கொடுத்தது!
அந்த மலர்ச்சியுடனே, சிநேகாவிற்கு அன்று அவர்கள் பார்க்க போகும் இடத்தை பற்றி, அதை யாரிடம் இருந்து வாங்க போகிறான், இடத்தின் தோராய விலை, பிற்காலத்தில் அங்கே என்ன செய்ய நினைத்திருக்கிறான், என அனைத்தையும் பொறுமையாக விளக்கினான் ஆகாஷ்.
சினேகா அவன் சொன்னதை எல்லாம் அமைதியாக கேட்காமல், ‘இப்படியா’, ‘அப்படியா’ என பல பல கேள்விகளை கேட்டு ஆகாஷின் மனதில் மேலும் சில படிகள் உயர தான் செய்தாள்!
இப்படியே அலுவலக விஷயங்களை பேசியபடி இருவரும் பார்க்க வந்த இடத்தை வந்து அடைந்தார்கள்.
அந்த குறுப்பிட்ட இடத்தில் இருந்து சற்று தொலைவில் ஒன்றிரண்டு வீடுகள் இருந்தன.
பக்கத்திலேயே மர வேலைபாடுகள் செய்யும் ஒரு ஆலை (saw mill) இருந்தது! ஒரு சிறிய இயந்திர தொழிற்சாலையும் (mechanical factory) இருந்தது.
காரை ஓரமாக நிறுத்திய ஆகாஷ், அந்த இடம் சேரும், சகதியுமாக இருப்பதை பார்த்து விட்டு, கீழே இறங்க தயக்கப்பட்டு காரிலேயே அமர்ந்திருந்தான்!
கீழே இறங்காமல் எப்படி இடத்தை ஆய்வு செய்வது என்று அவன் யோசிக்கும் போதே, காருக்கு வெளியே நின்றிருந்த சினேகா,
“சார், லோகேஷன் நல்லா இருக்கு சார்! ரொம்ப ரிமோட்டுன்னு சொல்ல முடியலை! இரண்டு சின்ன லெவல் ஃபேக்டரீஸ் பக்கதிலேயே இருக்கு,” என்றாள் உற்சாகத்துடன்.
இவள் எப்போது காரில் இருந்து கீழே இறங்கினாள் என்று அவன் யோசிக்கும் போதே,
குனிந்து அங்கிருந்த சேற்று மண்ணை கையில் தொட்டுப் பார்த்துக் கொண்டே, “உங்க கிட்ட ரேட் பேசினப்போ இந்த மண்ணு பத்தி சொன்னாங்களா சார்?” என்று தன் பேச்சை