(Reading time: 7 - 14 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

   

“நீங்க தைரியமான பொண்ணு சினேகா! இவ்வளவு தூரம் தனியா என்னோட வந்திருக்கீங்களே,” என்றான்.

   

நோட்புக்கில் இருந்து விழிகளை நிமிர்த்தி சினேகா,

   

“எனக்கே அது ஆச்சர்யம் தான் ஆகாஷ் சார்... உங்க ஸ்டேடஸ்க்கு டிரைவர் வச்சிருப்பீங்கன்னு நினைச்சேன்,” என்று சொல்லி விட்டு தன் வேலையை தொடர்ந்தாள்.

   

ஹுஹும்... பேசாமல் அவளின் நோட்புக்கை வாங்கி தூக்கி போட்டு விடலாமா என்று யோசித்தவன், உடனேயே அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டான்!

   

“அப்படி ட்ரைவர் எல்லாம் இல்லாம உங்களை மட்டும் இன்வைட் செய்து இவ்வளவு தூரம் ட்ரைவ் செய்திருக்கேன்... உங்களுக்கு என்னை பத்தி தப்பா எதுவும் தோணலையா?”

   

“இ...” என சொல்லத் தொடங்கிய சினேகா, அதை பாதியில் நிறுத்தி விட்டு... ஆகாஷின் கேள்வியில் இருக்கும் நேரடி, மறைமுக அர்த்தங்களை ஆராய்ச்சி செய்து விட்டு, அவனை ஒரு பார்வை பார்த்தாள்!!!!!

   

"ஹலோ சார், என்னை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது? நான் கராத்தேல ப்ளாக் பெல்ட் வாங்கி இருக்கேன்... பக்கத்துல வந்தா..."

   

கண்களில் கோபம் கொப்பளிக்க, வார்த்தைகளில் தீப்பொறி பறக்க பேசிக் கொண்டே போன சினேகா, ஆகாஷின் கண்களில் புதிதாக வந்திருந்த ஒளியைக் கண்டு குழப்பத்துடன் பேச்சை நிறுத்தினாள்.

   

அவளின் ஊகம் சரி என்பதை போல, 

   

"என்ன மிஸ் ஜான்சி ராணி, ஒன்லி கராத்தே ப்ளாக் பெல்ட் தானா? இன்னும் நிறைய லிஸ்ட் வச்சிருப்பீங்கன்னு நினைச்சேன்..." என்று கிண்டலாக கேட்டான் ஆகாஷ்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.