புன்னகைத்தாள்!!!
ஆகாஷின் இதயம் அந்த புன்னகையின் தாக்கத்தில் நின்று... பின் வேகமாக துடித்தது!
சினேகாவை முதல் நாள் யாரென்றே தெரியாமல் பார்த்தது தவிர, எப்போதுமே வேலை தொடர்பான சூழ்நிலையில்... தொழில்முறை முகமூடியுடன் தான் பார்த்திருக்கிறான்...
அவனுடைய அலுவலகத்தில் அவளை சந்தித்தப் போதும் சரி.... அவனுடைய மாலில் அவளை எதிர்பார்க்காமல் பார்த்த போதும் சரி... அவளிடம் அதே தொழில்முறை அணுகுமுறை தான் இருந்தது...
இப்போது முதல் முறையாக அந்த முகமூடி விலகி சினேகா எனும் இளம்பெண்ணின் புன்னகை ஒளிரவும், ஆகாஷ் தடுமாறி தான் போனான்!
வந்த வேலையை முடித்து விட்டு இருவரும் அங்கிருந்து கிளம்பிய போது இதமான இளமாலை பொழுதாகி இருந்தது...
ஆகாஷ் அமைதியாக காரை ஓட்டிக் கொண்டிருந்தான்...
சினேகாவின் அந்த புன்னகையும்... இப்போது பல்வேறு நிறங்களில் மின்னிய மாலை நேரத்து வானமும், தங்கமாக ஜொலித்த சூரியனும்... அவனின் மனதை உல்லாசமானதாக மாற்றி இருந்தது...
சினேகா பக்கமாக பார்த்தான்... அவள் ஒரு சிறிய நோட்பேடில் மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தாள்.
அவள் மூச்சு விடாமல் பேசியதை எழுதுகிறாள் என்பதை புரிந்துக் கொண்டவனுக்கு சிரிப்பு வந்தது...
அவள் மீண்டும் முழுக்க, முழுக்க தொழில் உலகத்தினுள் போய் விடாமல் தடுக்க விரும்பியவனாக,