(Reading time: 6 - 12 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 44 - சசிரேகா

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

னியாக விடப்பட்ட சம்யுக்தாவோ தில்லை தன்னுடன் இல்லாததைப் பற்றிக் கூட கவலைப்படாமல் கலை நிகழ்ச்சியை கண்டு ரசித்தாள். அதில் சீப் கெஸ்ட்டாக வந்திருந்தவருக்கு சம்யுக்தாவை நன்றாகவே தெரியும், இன்னும் சொல்ல வேண்டுமென்றால் அவர் சம்யுக்தாவின் தந்தைக்கு நண்பராவார். அதனால் நண்பரின் மகளை அந்த விழாவில் கண்டதில் மகிழ்ந்தார். கூடவே திருமணத்திற்கு வரமுடியாத சூழ்நிலையை பற்றி அவளிடம் எடுத்துச் சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைத்தவர் கலை நிகழ்ச்சியில் வந்த சிறு இடைவேளையை பயன்படுத்திக் கொண்டு சம்யுக்தாவை காணச் சென்றார்.

   

அவளோ வந்தவரைக் கண்டதும் மகிழ்ந்தாள்

   

”அங்கிள் நீங்களா, எப்படியிருக்கீங்க அங்கிள்“

   

”நான் நல்லாயிருக்கேன்மா சாரிம்மா உன் கல்யாணத்துக்கு என்னால வரமுடியாம போயிடுச்சி, சாரிம்மா, உன் கல்யாணத்துக்கு என்னோட வாழ்த்துக்கள்”

   

”எதுக்கு அங்கிள் சாரியெல்லாம், என் கல்யாணம்தான் நடக்கலையே நின்னுப் போச்சே”

   

”என்னம்மா சொல்ற என்ன நடந்துச்சி”

   

”அது ஒரு பெரிய கதை அங்கிள்“ என சோகமாக சம்யுக்தா சொல்ல அந்த நபரும் 

   

”வா வா இங்க வேணாம் அங்க போய் தனியா பேசலாம் வா” என அவராகவே அவளை அழைத்துக் கொண்டு தனியாக ஒரு இடம் நோக்கிச் செல்ல தில்லைக்கு வசதியாகிவிட்டது

   

சம்யுக்தாவிற்கு தில்லை தேடிவந்த ஆள் இவர்தான் என தெரியாமலே அவருடன் சென்று தனியாக நின்றாள்.

   

”சொல்லும்மா என்னதான் நடந்துச்சி, ஏன் உன் கல்யாணம் நின்னுடுச்சி”

   

”அது தானா நிக்கலை ஒருத்தன் அந்த கல்யாணத்தை நிறுத்திட்டான் அங்கிள்”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.