(Reading time: 6 - 12 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

   

”யாரும்மா அது”

   

”நான்தான்” என சொல்லிக் கொண்டே வந்து சம்யுக்தாவின் பக்கத்தில் நின்றான் தில்லை. அவனைக் கண்டதும் அந்த கெஸ்ட்டுக்கு பக்கென்றது

   

”தில்லை நீயா“

   

”நானேதான் வர்றியா போவோம்” என சொல்லியபடியே அவரின் கையை பிடிக்க அதைக் கண்ட சம்யுக்தாவோ அலறினாள்

   

”என்ன செய்றீங்க நீங்க, அவரை விடுங்க”

   

”நீ சும்மாயிரு நாங்க தேடி வந்த ஆளே இவர்தான், எப்படிடா இவரை பிடிக்கறதுன்னு பார்த்தேன், நீயே வழியை காட்டிட்ட ரொம்ப நன்றிம்மா, நீ போய் கலை நிகழ்ச்சியைப் பாரு, இவர்கிட்ட நான் ஒரு 5 நிமிஷம் பேசிட்டு வரேன்”

   

”வேணாம் இவரையும் கொன்னுடாத ப்ளீஸ் அவரை விட்டுடு” என சம்யுக்தா கெஞ்ச கெஸ்ட்டாக வந்தவருக்கோ பக்கென்றது, அவர் தில்லையை கண்டு மிரண்டார். தில்லையோ அவரிடம்

   

”சே சே நான் உங்களை கொல்ல வரலை, எனக்குத் தேவையான விசயத்தை கேட்க வந்தேன்”

   

”என்ன விசயம்” என பயத்தில் கேட்க அவனோ

   

”கள்ள மார்க்கெட் நடத்தி வந்தானே சேகரு, உன் ஆளுதானே எங்க அவன்“

   

”சேகரா எனக்குத் தெரியாது நான் அவனை பார்த்ததில்லை”

   

”இப்படி கேட்டா நீ ஒழுங்கா சொல்லமாட்ட, கேட்கற விதத்தில கேட்டா சொல்லிடுவ வா வா வா” என அழைத்துக் கொண்டு வேறு பக்கம் செல்ல சம்யுக்தாவும் கூடவே சென்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.