”அதான் அவரு தெரியாதுங்கறார்ல விடேன் தில்லை”
”அவனுக்கு தெரியும், பொய் சொல்றான், இன்னிக்கு இவனை விட்டா பாரினுக்கு ஓடிடுவான், இன்னிக்கு என்ன ஆனாலும் சரி இவனை நான் விடறதாயில்லை சேகரையும் விடமாட்டேன்” என கோபமாக சொல்ல அவளுக்கு வெறுப்பே வந்தது
”உன் ரௌடி தனத்துக்கு அளவேயில்லையா, பாவம் அவரை விட்டுடு”
”முடியாது சம்யுக்தா” என்றான் அவளோ அவனை விட்டுவிட்டு சிக்கியவரிடம் கெஞ்சினாள்
”அங்கிள் சொல்லிடுங்க, உங்க உயிரை காப்பாத்திக்குங்க, இவன் நிறைய பேரை கொன்னுருக்கான், அதை நான் நேர்ல பார்த்திருக்கேன், அதை வைச்சி சொல்றேன் உண்மையை சொல்லிடுங்க சேகரு எங்க” என கேட்க அவருக்கு பயமே வந்தது.
”சேகர் இருக்கற விசயம் சொன்னா அவன் என்னை கொன்னுடுவானேம்மா என்னால முடியாது” என சம்யுக்தாவிடம் சொல்ல தில்லையோ உடனே சம்யுக்தாவை பிடித்தான்
”ஏய் இதப்பாரு உண்மையை சொல்லலை இவளை கொன்னுடுவேன்“ என சொல்ல சம்யுக்தாவோ பயமின்றி வெறுப்பாக தில்லையை பார்த்தாள். அந்த ஆளோ பயத்தில்
”வேணாம் விட்டுடுப்பா, அவள் என் நண்பனோட பொண்ணு பாவம் அவளை விட்டுடு”
”அப்படின்னா சேகரு எங்கன்னு சொல்லு“
”முடியாது”
”அப்ப இவளை கொன்னுடுவேன்” என சொல்ல அவளோ
”டேய் என்னடா செய்ற, என்னை விடுடா” என திட்ட அவனோ