தொடர்ந்தாள் அவள்.
சேறாக இருக்கிறது என்று ஆகாஷ் கீழே இறங்காமல் இருக்க, சினேகாவோ அந்த இடத்தில இருந்த மண்ணை கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்!!!
அவனுக்கு தெரிந்த பெண்கள் யாருமே இவளை போல இல்லை...
இது தொழில் ஆர்வமா? அல்லது நிறைய விஷயங்களை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசையா???
இது போன்ற ஆர்வத்தை வேறு எங்கே பார்த்திருக்கிறான்???
பதில் கண்டுபிடிக்க முடியாமல் ஆகாஷின் மூளை கண்ணாமூச்சி விளையாடியது!
ஆகாஷ் வேறு விதமான ஆராய்ச்சியில் ஆழ்ந்து போய் இருக்க, அதை பற்றி தெரியாத சினேகா, தன் ‘நில’ ஆராய்ச்சியை தொடர்ந்துக் கொண்டிருந்தாள்.
“இங்கே பில்டிங் கட்ட கட்டாயம் குறைஞ்சது அஞ்சு அடிக்கு மேல முதல்ல மண்ணு போடனும் சார்! அதும் முதல்ல சாயில் (soil) டெஸ்ட் செய்யனும்... இங்கே பில்டிங் கட்டினா நிக்குமான்னு பார்க்கனும்... இதை எல்லாம் சொல்லி நீங்க ரேட்டை குறைச்சு பேசுங்க சார்... லோகேஷன் நல்லா இருந்தாலும் இதெல்லாம் இந்த இடத்தோட குறைபாடுகள்! இன்னும்....”
சினேகா தொடர்ந்து பேசிக் கொண்டே போக....
ஆகாஷ் ஆ... என வாய் திறந்து பார்த்துக் கொண்டே இருந்தான்!!!! நல்லவேளையாக அவன் பக்கமாக அப்போது ஈ, கொசு எதுவும் போகவில்லை!!!!!
வேண்டிய விபரங்களை சேகரித்து விட்டு, ஒருவழியாக பேச்சையும் நிறுத்தி விட்டு, சினேகா காரின் பக்கத்தில் வர, ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்து அவள் பக்கமாக நீட்டினான் ஆகாஷ்!
ஒரு வினாடி புரியாமல் திகைத்தவள், உடனேயே புரிந்துக் கொண்டு, பெரிதாக... பற்கள் தெரிய