தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 45 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
ஃபோனை காதில் வைத்த நந்திதாவினுள் ஏதேதோ ரசாயன மாற்றங்கள் ஏற்பட்டது.
ஃபோனின் மறுபக்கம் இருப்பது உதய் என்ற நினைவே அவளை எதுவோ செய்தது!
ரொம்பவே முயற்சி செய்து, “ஹலோ,” என்றாள்!
பேசியது அவளின் குரல் என்று நம்ப அவளுக்கே கஷ்டமாக தான் இருந்தது.
“ஹாய் நதி டார்லிங்,” என உல்லாசம் நிறைந்த உதயின் குரல் ஃபோனின் வழியே ஒலிக்கவும், அவளின் காதில் தேனருவி பாய்ந்தது!
எதுவும் சொல்ல முடியாமல் அமைதியாகவே இருந்தாள்!
“நதி??? என்ன சத்தத்தையே காணும்???”
உதயின் கேள்வி காதில் விழுந்தாலும் மௌனமாகவே இருந்தாள் நந்திதா!
“என்னை பார்த்தா தான் உனக்கு பிடிக்காது... நான் பேசினாலும் பிடிக்காதா???”
உதய் சீண்டுகிறான் என்பது புரிந்ததால் நந்திதாவின் உதட்டில் புன்னகை மலர்ந்தது! ஆனாலும் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்!
“ஹேய் நதி, பேச போறீயா இல்லையா???”
ஹுஹும்... நந்திதா இப்போதும் வாயை திறக்கவில்லை!
“ஹலோ???? நதி லைன்ல இருக்கீயா??? ஹலோ???”
உதயின் குரலில் உண்மையாகவே பரபரப்பு தெரியவும், மெல்ல, “ஹலோ,” என்றாள் நந்திதா!