“ஓ, லைன்ல தான் இருக்கீயா??? இதெல்லாம் அநியாயமா தெரியலையா??? இப்படி என்னை தனியா பேச விடுற...”
“சாரி...”
“அம்மாடியோ!!! ஹலோ தவிர வேற ஒரு வார்த்தை சொல்லிட்ட... பரவாயில்லையே... ஏன் நதி?”
“ம்ம்ம்ம்... என்ன ஏன்?”
“ஏன் என் கிட்ட சரியா பேச மாட்டேங்குற??? இந்த கல்யாணத்துல உனக்கு சம்மதம் தானே???”
“ம்ம்ம்ம்...”
“தேங்க் யூ சோ மச் டார்லிங்... உன்னை என் கண்ணு மாதிரி நல்ல படியா பார்த்துப்பேன்... “
“ம்ம்ம்... இப்படி எல்லாம் கூட பேச தெரியுமா உங்களுக்கு...”
“இன்னும் கூட நிறைய பேசுவேன்... கேட்குறீயா???”
“அதான் காலம் பூரா கேட்க போறேனே...”
“வாவ்... மை ஸ்வீட் நதி... நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன்னு உனக்கு தெரியாது... ஐ லவ் யூ சோ மச்...”
உதயின் வார்த்தைகள் நந்திதாவை என்னமோ செய்தது! என்ன பதில் சொல்வது என்று புரியாமல் அமைதியாக இருந்தாள் அவள்!
“ஐ னோ நதி... ஐ ஆம் கிரேஸி... க்ரேஸி இன் லவ்... கல்யாணத்துக்கு அப்புறம் நான் காட்ட போற அன்பு மழையில நனைஞ்சு நீயும் இப்படி தான் என் மேல பைத்தியமா மாற போற...”