“ஆமாம்... என் அத்தை சூப்பர் ஃபாஸ்ட்... நீயும் உன் வருங்கால அத்தையும் தனியா பேசிட்டு இருந்த நேரத்திலேயே ஃபோன் போட்டு டேட் வாங்கிட்டாங்க... செப்டம்பர் ஒன்பதாம் தேதி ரொம்ப நல்ல நாளாம்... ஸோ நந்துஜி, இன்னும் மூணு மாசத்துல நீ திருமதி உதய் ஆக போற!!!”
✽✽✽
“...இன்னும் மூணு மாசம் தானே... நந்து நீ நாளையில இருந்து ஆஃபிஸ் போக வேண்டாம்...”
அன்று நடந்த முழு கதையை ராஜசேகரிடம் விவரித்துக் கொண்டிருந்த காமாட்சி, இறுதியில் நந்திதாவிடம் அதை சொல்லி பேச்சை முடிக்கவும், நந்திதா திரு திருவென விழித்தாள்.
“திடீர்னு எப்படி ஆன்ட்டி போகாம இருக்கிறது... சொல்லி பர்மிஷன் வாங்கிட்டு...”
தயக்கத்துடன் இழுத்தாள் நந்திதா.
“பர்மிஷன் வாங்குறது நீ உதய் கிட்ட தானே வாங்கனும்... சரத், நீ உதய்க்கு ஒரு கால் போட்டு நந்து நாளையில இருந்து ஆஃபிஸ் வர மாட்டான்னு சொல்லிடு,” என்று மகனுக்கு வேலையை கொடுத்தாள் காமாட்சி!
சரத்தும் ஏற்றுக் கொண்டு சரி என தலை அசைத்தான்...
வேறு வழி இல்லாமல் அரை மனதுடன், “அப்போ சரி ஆன்ட்டி,” என்றாள் நந்திதா.
“உதய் நந்திதா கல்யாணம் அருமையா நடக்கனும் காமாட்சி! நீ கல்யாணத்துக்கு எல்லாம் ப்ளான் செய்துட்டு சொல்லு,” என ராஜசேகர் மனைவியிடம் சொல்லவும், துளசி தோழியை பார்த்து கண்களை உருட்டினாள்!
நந்திதா விழிக்கவும், அவள் பக்கம் குனிந்த துளசி, ரகசியக் குரலில், “மாமா இவ்வளவு