இப்போதே அவளுக்கும் அவன் சொல்வது போல அவன் மீது காதல் இருக்கிறது தான்... ஆனாலும் அதை வாய் திறந்து வார்த்தைகளாக வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தாள் அவள்!
“என்னால நம்பவே முடியலை நதி... திடீர்னு நம்ம லைஃபை யாரோ ரிமோட் வச்சு ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்தது மாதிரி எல்லாமே ரொம்ப வேகமா நடக்குது... அம்மா இன்னைக்கே வந்து உன் கிட்ட பேசுவாங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை...”
“ம்ம்ம்...”
“இந்த மாதிரி உன்கிட்ட உரிமையா பேசனும்னு எவ்வளவு நாளா காத்திருக்கிறேன்னு உனக்கு தெரியுமா?”
“...”
“இட்ஸ் ட்ரூலி ஸ்பெஷல் டு மீ...”
“ம்ம்ம்ம்...”
“ஓகே டார்லிங்... ஒரு இம்பார்டன்ட் யூஎஸ் கால் இருக்கு... அதை முடிச்சிட்டு உனக்கு கால் செய்றேன்... உன் ஃபோனை கையிலேயே வச்சுக்கோ... சரியா?”
“ம்ம்ம்ம்...”
“பை... நதி... பை.... அண்ட் இது நம்முடைய இந்த வெரி ஸ்பெஷல் மொமென்ட்க்காக... இச்...”
ஃபோனின் வழியே உதய் கொடுத்த முத்தமே அவளை நாக் அவுட் செய்து விட...
“பை நதி... சீக்கிரமா பேசுறேன்,” என உதய் மேலே பேசி விட்டு அழைப்பை துண்டித்தது கூட