புரியாமல் முகம் சிவக்க அமர்ந்திருந்தாள் நந்திதா!
ஃபோன் வழியாக வந்தால் என்ன... முதல் முத்தம் எப்போதும் ஸ்பெஷல் தானே!
நந்திதாவிற்கென பிரத்தியேகமாக இளம் தென்றல் வீசியது...
வானம் மெல்லிய தூறல் சிந்தியது...!
பறவைகள் இனிய குரலில் கானங்கள் பாடியது....!
அதற்கெல்லாம் நடுவே, திடீரென அவளுடைய கற்பனை உலகை கலைக்கும் விதத்தில் துளசியின் குரல் ஒலித்தது.
“என்ன கல்யாணப் பொண்ணே, இப்படி ஒரு மாதிரியா உட்கார்ந்திருக்க???”
நந்திதா துளசியை பார்த்து திரு திருவென விழித்தாள்!!
“என்னடி ஆச்சு உனக்கு? பத்து நிமிஷம் முன்னாடி வரைக்கும் வாய் கிழிய பேசிட்டு இருந்த... இப்போ என்ன?”
“என்ன... ஒன்னுமில்லையே...”
“ஒன்னுமில்லையா? நீ சொல்லலைனாலும் என்னன்னு எங்களுக்கே தெரியும்... உனக்கு வந்திருக்கிறது உதய்-ஓ-ரொமான்ஸ்-ஓ ஃபோபியா... சரியா????”
“ஒசிமம்,” என்று சிணுங்கிய நந்திதாவின் முகம் அழகாக சிவந்தது!
“இபப்டி ஓவரா வெட்கப் பட்டு எல்லா வெட்கத்தையும் இப்போவே காலி செய்திடாதேடி... மூணு மாசத்துல கல்யாணம்... அதுக்கும் கொஞ்சம் ஸ்டாக்ல வச்சுக்கோ...”
“மூணு மாசத்தில கல்யாணமா?”