(Reading time: 6 - 12 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 17 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

நான் வேலை செய்ததே பரவாயில்லைன்னு யோசிக்குற அளவுக்கு பேசி போர் அடிக்குறேனா சார், அமைதியா இருக்கீங்க?” என ஆகாஷ் பக்கம் பார்த்துக் கேட்டாள் சினேகா!

   

“இல்லை... நீங்க சொன்னதை பத்தி யோசிச்சிட்டு இருந்தேன் சினேஹா... எந்த அளவுக்கு நீங்க யோசிக்க வேண்டி இருக்குன்னு யோசிச்சேன்,” என்றான் ஆகாஷ்!

   

“இதெல்லாம் ஒன்னுமில்லை சார், எனக்கு கொலுசு போடுறது பிடிக்கும்... ஆனால் என்னுடைய பழைய வேலைல ஒருத்தன் எப்போவும் வந்து அந்த கொலுசு சத்தத்தை வச்சு ஏதேதோ அசடு வழிய பேசிட்டே இருப்பான்... அனாதை இல்லத்துல வளர்ந்தவ... யாருமில்லைன்னு அவனுக்கு எல்லாம் நினைப்பு... அதுக்காகவே இப்போ எல்லாம் கொலுசுல சத்தம் போடுற முத்தை எல்லாம் எடுத்துட்டு, சத்தமே வராம கொலுசு போடுறேன்...”

   

வெகு இயல்பாக சினேகா சொன்னது... கடந்த சில நாட்களாகவே ஆகாஷிற்குள் இருந்த கேள்விக்கு பதிலை கொடுத்தது!!!!

   

ஆனால் அந்த பதில் அவனுக்கு சந்தோஷத்தை கொடுக்கவில்லை....

   

உனக்கு யாருமில்லாமல் இல்லை... நான் இருக்கிறேன்... என்று சொல்ல விரும்பிய மனதையும், உதடுகளையும் அடக்க அவன் பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டி இருந்தது!!!!

   

✽✽✽

   

வழக்கத்தை விட சீக்கிரமாக அலுவலகம் வந்திருந்த ஆகாஷ் அவனுக்கு பிடித்த காரிடாரின் பக்கத்தில் வருவதற்கு முன்பே, அவனின் மனம் சினேகாவை தேட தொடங்கி இருந்தது!

   

இன்றும் அவள் காரிடாரில் இருக்க போவதில்லை என்ற நிராசையுடனே நடந்தவனின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது...

   

அங்கே சினேகா முன்பொரு நாள் அவன் பார்த்ததுப் போலவே, இப்போதும் அவனுக்கு முதுகு காட்டி நின்றிருந்தாள்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.