(Reading time: 6 - 12 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

   

தானாக உதட்டில் ஒரு புன்னகை உதயமாக சத்தம் போடாமல் மெல்ல நடந்தான் ஆகாஷ்!

   

மற்ற நாட்களை போல தூரத்தில் தெரிந்த இயற்கை அழகு இன்று அவனின் மனதை மயக்கவில்லை... அது அவனின் கண்ணில் படக் கூட இல்லை... காரிடார் கண்ணாடி சுவரின் வழியே எதையோ பார்த்துக் கொண்டு நின்றிருந்த சினேகா மட்டுமே அவனின் கவனத்தை ஈர்த்திருந்தாள்...

   

அவளின் பக்கத்தில் சென்றவன்,

   

“குட் மார்னிங் சினேகா,” என்றான் மெல்ல!

   

பெரும்பாலான மேற்கத்திய நடனங்களின் முதல் நிலையில் pivot என்று ஒரு ஸ்டெப் சொல்லிக் கொடுப்பார்கள்.

   

நளினமாக திரும்பும் நடன ஸ்டெப் அது...

   

கிட்டத்தட்ட அதே பாணியில் நேர்த்தியாக சட்டென்று திரும்பினாள் சினேகா...

   

ஆகாஷ் மேற்கத்திய நடனம் கற்றவன் என்பதால், டூயட் நடனம் ஆட அவள் பக்கம் ஆர்வத்துடன் நீண்ட அவனின் கைகளை கஷ்டப்பட்டு அடக்கி வைத்தான்!!!!

   

சினேகாவின் கண்களில் நிறைந்திருந்த கலவரமும், அதிர்ச்சியும் கலந்த கலப்படமான உணர்ச்சி, ஆகாஷின் திடீர் விஜயம் அவளை திகைக்க செய்திருப்பதை சொல்லாமல் சொன்னது...

   

“என்னாச்சு சினேகா உங்களை ஸ்டார்டில் (startle) செய்துட்டேனா??” என ஆகாஷ் வினவ,

   

“நோ... யெஸ்... இல்ல,” என கோர்வையாக பதில் சொல்ல முடியாமல் தடுமாறினாள் சினேகா!

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.