(Reading time: 6 - 12 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

   

இந்த காரிடாரில் ஆட்களை பார்ப்பதே அரிது... அப்படியே பார்த்தாலும் கையில் இருக்கும் மொபைலில் நொண்டிக் கொண்டோ, பேசிக் கொண்டோ தான் செல்வார்கள்...

   

முதல் முதலாக அவனை போலவே இயற்கையை ரசிக்கும் ஒரு சக மனித ஜீவனை சந்தித்திருக்கிறான்... அதுவும் அந்த ஜீவன் இந்த அழகிய சினேகாவாக இருக்கும் போது...

   

கட்டிழந்து ஓடிய எண்ணங்களுக்கு அவசரமாக வேலி அமைத்து கட்டுப்படுத்தினான் ஆகாஷ்...

   

“கூல்... கூல்...! முன்னாடி ஒரு நாள் கூட உங்களை இங்கே பார்த்தேனே... அன்னைக்கும் இதே தான் செஞ்சுட்டு இருந்தீங்களா??”

   

“ஞாபகம் வச்சிருக்கீங்களா சார், உங்களுக்கு நல்ல மெமரி... ஆமாம் சார்... அன்னைக்கும் நேச்சரை தான் பார்த்துட்டு இருந்தேன்...”

   

“இந்த வியூ அவ்வளவு பிடிச்சிருக்குன்னா, ஏன் இவ்வளவு நாளா உங்களை இந்த இடத்துல பார்க்கவே முடியலை???”

   

ஆகாஷ் இலகுவாக கேட்ட கேள்விக்கு உடனே பதில் சொல்லாமல் யோசித்தாள் சினேகா....

   

அந்த கேள்விக்கான உண்மையான பதில் அப்படிப்பட்டது...

   

அது என்னவோ ஆகாஷிடம் ஒரு சில நிமிடங்கள் பேசினாலே மனதில் இருப்பதை அப்படியே ஒப்பிக்க தொடங்கி விடுகிறாள்... அன்று சைட் விசிட் போது மஹா அக்கா பற்றி... அவளை பற்றி... அவளின் கொலுசு பற்றி வரைக்கும் கூட ஒரே மூச்சில் ஒப்பித்து முடித்து விட்டாள்...

   

“என்ன இவ்வளவு நேரம் யோசிக்குறீங்க சினேகா? ரொம்ப பயங்கரமான பதிலா இருக்கும் போலருக்கே???” விடாமல் மீண்டும் கேட்டான் ஆகாஷ்.

   

அவனை அதற்கு மேல் காத்திருக்க வைக்க கூடாது எனும் எண்ணத்தில் அவசரமாக பதில் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.