(Reading time: 8 - 16 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 46 - சசிரேகா

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

தில்லையும் ரவியும் சண்டையில் மும்முரமாக இருந்தார்கள் அதில் தில்லையால் தாக்கு பிடிக்க முடியவில்லை ஆனாலும் தனது முயற்சியை கைவிடாமல் இருந்தான். தில்லை தோல்வியடைவதைக் கண்ட சம்யுக்தாவோ அந்தப் பக்கம் இந்த பக்கம் என தேடிப்பிடித்து உருளையாக இருந்த 2 அடி இரும்பு ராடை கொண்டு வந்து ரவியின் முதுகில் ஒரு அடி அடித்தாள். அதில் அவனோ அலறி துடித்தான்

   

”என் கழுத்தையா பிடிக்கற, பாவி உனக்கு தில்லை வேணும்னா அவன் கழுத்தை பிடிக்க வேண்டியதுதானே, சும்மாயிருக்கற என்னை ஏன்டா தொல்லை பண்ண என் கழுத்து வலிக்குது, உன்னை என்ன செய்றேன்னு பாரு” என சொல்லியதோடு விடாமல் அவன் மீது இன்னொரு முறை அடித்தாள் அதில் அவனுக்கு சுர்ரென கோபமே வந்தது. 

   

அவளிடம் இருந்து கம்பியை வாங்கி அவளை அடிக்க வர குறுக்கே வந்த தில்லை அவனிடம் இருந்த அந்த ராடை பிடுங்கி தூர எறிந்தான். அதற்குள் ரவியோ தன் கையில் இருந்த சிறிய கத்தியால் தில்லையின் வயிற்றில் கீறிவிட்டான். அந்த வலியை அவனால் தாங்க இயலவில்லை. அவனோ

   

“சம்யுக்தா வெளியே போ, இங்க இருக்காத ஆபத்து” என சொல்ல அவளோ கேளாமல் மீண்டும் ராடைக் கொண்டு ரவியை தாக்கினாள். அதில் ரவிக்கு கோபமே வந்து சட்டென சம்யுக்தாவை பிடித்து அவளது கழுத்தில் கத்தியை வைத்தான். அதில் தில்லைக்கு பக்கென்றது. 

   

அவளோ அவனிடம் திமிற ரவியோ அவளை இறுக்கமாக பிடித்துக் கொண்டான். தில்லையோ 

   

”ரவி வேணாம் அவளை விட்டுடு, அவள் பாவம் விட்டுடு”

   

”இங்கிருந்து போயிடு, அவளை நான் விட்டுடறேன்”

   

”சரி நான் போறேன் அவளை விட்டுடு” என சொல்லியபடியே பின்புறமாக நடக்க ஆரம்பிக்க ரவியும் சம்யுக்தாவை பிடித்தபடியே முன்னோக்கி வந்தான்.

   

அங்கு சேகரை தில்லையின் ஆட்கள் பிடித்து வைத்திருந்தார்கள். அவர்களும் சம்யுக்தாவின் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.