”சாரி தில்லை” என்றாள் மெதுவாக, அதைக்கேட்டு அவனோ காட்டமாக பேச ஆரம்பித்தான்.
”என்கூட வராதேன்னு எத்தனை முறை சொன்னேன் ஆபத்து இருக்கு போயிடுன்னு சொன்னேன், உயிரை பத்திகூட கவலையேப்படாம என்கூட அலையற இன்னிக்கு ரவி உன்னை கொன்னிருந்தா என்னாயிருக்கும் கொஞ்சமாவது பயமிருக்கா இல்லையா உனக்கு” என கோபத்தில் பொங்கி திட்டிவிட அவளோ வெலவெலத்துப் போனாள். மிக அருகில் தில்லை அவளை இழுத்து அவளின் முகத்தை நேருக்கு நேராக பார்த்து
”இதான் என் வாழ்க்கை, என்கூட இருந்தா ஒவ்வொரு நிமிஷமும் நரகமாதான் இருக்கும், என்னை விட்டு போயிடு இல்லைன்னா அநியாயமா உன் உயிரை இழந்துடுவ”
”அப்ப எனக்குண்டான நியாயத்தை நீ வழங்கமாட்டியா” என பயத்துடனே பேசிவைக்க அவனோ நியாயம் என்றதும் கோபம் பொங்கியது அவனுக்கு
சட்டென அவளை தள்ளிவிட்டு வண்டியை ஸ்டார்ட் செய்து வேகமாக ஒட்டினான். நேராக சிதம்பரம் ஊரின் எல்லைக்கே சென்றான். வண்டியை நிறுத்தினான்
”இதப்பாரு இதான் ஊர் எல்லை, இங்கயே இறங்கி ஓடிடு, என்கூட இருந்தா உன் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது போ என்னை விட்டுப் போ” என அவளை விரட்ட அவளோ முடியாது என சட்டமாக அமர்ந்தாள்.
”போக மாட்டியா”
”மாட்டேன் எனக்கான நியாயம் கிடைக்கறவரைக்கும் நான் உன்னை விட்டு போகமாட்டேன்”
”இதப்பாரு என்னை கெட்டவனாக்காதே, ஏதோ போனா போகட்டும்னு இத்தனை நாளும் உன்னை அனுசரிச்சி பார்த்துக்கிட்டேன், இனிமேல முடியாது கிளம்பு, போ, நல்ல வாய்ப்பு இது, இப்பவே நீ என்னை விட்டு போயிட்டா உன் உயிருக்கு எந்த சேதமும் இருக்காது, உன்னால எனக்கும் எந்த ஆபத்தும் வராது, ரெண்டு பேரும் அவங்கவங்க வாழ்க்கையை வாழலாம், அமைதியா போயிடு”