”முடியாது நான் போகமாட்டேன், நீ கெட்டவன், இதுக்கு மேலயா நீ கெட்டவனாகப் போற, நீ செய்யாத அநியாயங்களே இல்லை, உன்னைப் பத்தி பேப்பர்ல போட்டிருக்காங்க, நிச்சயமா நீ போலீஸ்கிட்ட ஒரு நாள் வசமா மாட்டுவ, அதுக்குள்ள எனக்கான நியாயத்தை நீ கொடுத்துட்டா நான் போயிட்டே இருப்பேன்”
”பேப்பர்ல வர்ற நியூஸ் எல்லாம் உண்மையாயிடுமா என்ன, அவங்க என்னை தேடறதா சொல்றாங்க அவ்ளோதான் தேடறோம் தேடறோம்னு சொல்வாங்களே தவிர அவங்களால என்னை பிடிக்க முடியாது, நானும் ஜெயிலுக்கெல்லாம் போக மாட்டேன்”
”அப்ப அந்த செய்தி அது உண்மையில்லையா”
”அது வெறும் கண்துடைப்பு, இத்தனை வருஷமா என்னை போலீஸ் பிடிக்க முயற்சி செய்யுது, ஒருநாளாவது அவங்க கையில நான் மாட்டியிருப்பேனா இல்லை என்னைத்தான் அவங்க பிடிச்சிருப்பாங்களா, இதெல்லாம் வெறும் நாடகம், மக்களுக்காகத்தான் நான் இந்த மாதிரி நடந்துக்கறேன், இங்க நடக்கற எல்லாமே நாடகம்தான், உண்மை எனக்குள்ள ஒளிஞ்சிருக்கு, அந்த உண்மை ஒரு நாள் வெளிய வரும், அதுவரைக்குமாவது என்னை விட்டுப் போ, உன் உயிரை காப்பாத்திக்க இப்படியே போனா என்னால உன் உயிர் ஆபத்தில மாட்டிக்கும்”
”இப்ப மட்டும் என்னாச்சி, உன்னாலதான் நான் ஆபத்தில மாட்டிக்கிட்டேன்”
”அதுக்குதான் சொல்றேன் கிளம்பு”
”முடியாது”
“போக மாட்டியா”
”மாட்டேன்” என்றாள் சம்யுக்தா உறுதியாக
”உனக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயமா இருக்கு சம்யுக்தா சொல்ற பேச்சைக் கேளு, உனக்காக