”வேணாம் ரவி அவளை விட்டுடு” என கத்த ரவியோ அவளை விடாமல் தில்லையை வெறுப்பேற்றினான்.
அதில் சம்யுக்தாவோ பயந்துவிட்டாள். தில்லையை விட ரவி மிகவும் கெட்டவனாக இருக்கிறானே, தில்லையே பரவாயில்லை என நினைத்துக் கொண்டு தில்லையை பாவமாக பார்த்தாள். அதில் தில்லையும் துணிந்து முன்னேறினான். அவனின் வரவைக் கண்ட ரவியோ
”ஒரு அடி எடுத்து வைச்ச, இவள் கழுத்தில கத்தி இறங்கிடும்” என சொல்ல தில்லையோ அவன் சொன்னதை பொருட்படுத்தாமல் முன்னேறி அவர்களிடம் சென்றான். ரவியும் அவளது கழுத்தில் வைத்திருந்த கத்தியை அழுத்தமாக பிடிக்க அதில் அவளோ அலற தில்லையோ
”கத்தாதடி அமைதியா நில்லு, அவனால உன்னை எதுவும் செய்ய முடியாது நான் இருக்கேன், கண்ணை மூடிக்க” என்றான் உடனே அவளும் கண்களை மூடிக் கொள்ள அடுத்த நொடி டுமீல் என்ற சத்தம் கேட்டது, ரவி தரையில் சரிந்தான். சேகர் பயந்து ஓட அவனை தில்லையின் ஆட்கள் பிடித்துக் கொண்டார்கள். சம்யுக்தாவோ சத்தம் கேட்டு கண்கள் திறந்தாள்.
அவளது உடையில் ரத்தக்கறை இருந்தது அது ரவியுடையது. அவனோ ரத்த வெள்ளத்தில் தரையில் கிடப்பதைக் கண்டு பயந்தாள். தில்லையை பார்த்தாள் அவனோ தூக்கிய துப்பாக்கியை இறக்கவில்லை, சம்யுக்தா கண்கள் மூடவும் சட்டென துப்பாக்கியை எடுத்து அவளின் தலைக்கு வெகு பக்கத்தில் இருந்த ரவியின் கழுத்தை பார்த்து சுட்டதில் ரவிக்கு காயம் ஏற்பட்டது.
வலியில் துடித்துக் கொண்டிருந்தான் ரவி. சம்யுக்தா அவசரமாக தில்லையிடம் வர அவனோ சம்யுக்தாவின் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான். தில்லையின் ஆட்களில் சிலரோ
”அண்ணா சேகர் கிடைச்சிட்டான்”
”அவனை கொண்டு போய் விசாரிங்க, மத்தவங்களை பத்தின தகவல் வர்ற வரைக்கும் விடாதீங்க, கடைசி வரைக்கும் அவன் சொல்லலைன்னா கொன்னுடுங்க போங்க” என கட்டளையிட அவர்களும் சரியென்றார்கள்.