நிலைமையைக் கண்டு துடித்துப் போனார்கள்
”அண்ணா என்ன அண்ணா இது, அவங்களை ஏன் இப்படி மாட்டிவிட்ட” என தில்லையை திட்ட அவனோ
”நானாடா மாட்டிவிட்டேன், அவளேதான் போய் மாட்டிக்கிட்டா“
”காப்பாத்துண்ணா“
”அதான் பார்க்கறேன் சேகரை கூட்டிட்டு வெளிய போங்க“ என சொல்ல ரவியோ
”சேகரை விட்டுடு இல்லை இவளை கொன்னுடுவேன்” என கத்த அதற்கு தில்லையின் ஆட்களோ
”அண்ணா சேகரை விட்டுடலாம்ணா, இன்னொரு முறை அவன் வசமா மாட்டுவான், மாட்டற அன்னிக்கே அவனை கொன்னுடலாம் இப்ப அவங்களை காப்பாத்துண்ணா” என சொல்ல தில்லையோ ரவியிடம் பேச்சுவார்த்தையில் இறங்கினான்
”ரவி அவளை விட்டுடு, சேகர்தானே இந்தா அவனை உன்கூட வைச்சிக்க அவளை அனுப்பு”
என சொல்ல ரவியும் ஒப்புக் கொண்டான். உடனே சேகர் ரவியிடம் சென்றுவிட்டான். ஆனால் சம்யுக்தாவை ரவி விடவில்லை
”ரவி அதான் சேகர் வந்துட்டானே அப்புறம் என்ன அவளை விடு”
என சொல்ல அவனோ அவளின் மேனி வாசத்தில் மயங்கி தில்லையை பார்த்து இளப்பமாக சிரிக்க அவனின் நோக்கத்தை புரிந்துக் கொண்டான் தில்லை
”அவளை விட்டுடு இல்லை உன்னை கொன்னுடுவேன்” என மிரட்ட ரவியோ மெல்ல அவளின் கன்னத்தை தனது விரலால் தடவினான். அதற்கு அவளோ அலறினாள் தில்லைக்கோ அவன் செய்தது பிடிக்காமல் போனது