தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 44 - நவ்யா
"ஜனனி!"
உமேஷின் குரலில் தெள்ளத் தெளிவாக ஆச்சர்யம் கலந்திருந்தது!
"உமேஷ்!"
அவன் அவளின் ஃபோன் அழைப்பை ஏற்றதை நம்ப இயலாமல் ஆச்சர்யத்துடன் அவன் பெயரைச் சொன்னாள் ஜனனி.
"ஜானி, நான் உன்னோடப் பேசனும்."
அவள் சொல்ல நினைத்ததை அவன் சொல்கிறானே, என ஜனனி யோசிக்கும் வேளையில், உமேஷ் மூச்சு விடாதுப் பேசிக் கொண்டே போனான்!
"நீ எங்கே இருக்க ஜனனி?"
"நான் விஸ்வநாதன் சார் பங்களா பக்கத்துல இருக்கேன்."
"அங்கேயே இரு. நான் வரேன். நாம பக்கத்துல இருக்க ஐஸ்க்ரீம் ஷாப், காஃபி ஷாப், ரெஸ்டாரன்ட் ஏதாவது ஒன்னு போகலாம்."
"உனக்கு இது ஆஃபீஸ் டைம் இல்லையா?"
ஜனனி அந்தக் கேள்வியை முழுவதுமாக கேட்டு முடிக்கும் முன்பே, "பை ஜனனி. நான் வரேன். நீ பத்திரமா ஓரமா எங்கேயாவது நில்லு," என சொல்லி அழைப்பை துண்டித்திருந்தான் உமேஷ்.
ஜனனி ஒரு பெருமூச்சுடன் ஃபோனை காதில் இருந்து விலக்கினாள்.