“ம்ம்ம்...??? நோ, யெஸ், இல்ல...???? ஆமான்னு ஒன்னை மட்டும் விட்டுட்டீங்க???”
“ஹி ஹி ஹி... சாரி சார்...”
“சாரியா??? எதுக்கு சாரி சொல்றீங்க???”
என்ன சொல்வது என்று புரியாமல் ஒரு அசட்டு சிரிப்பை கொடுத்து சமாளித்தாள் சினேகா.
ஆகாஷிற்கு சினேகாவின் அந்த தடுமாற்றம் ரசிக்க கூடியதாக இருந்தது... ஆனால் அதை விட முக்கியமாக தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயம் ஒன்றும் இருந்தது...
“இங்கே என்ன செஞ்சுட்டு இருந்தீங்க சினேகா...?”
“சீக்கிரம் ஆஃபிஸ் வந்தேன் சார்... அதனால சும்மா... சும்மா....” என்று பேச தொடங்கிய சினேகா, ஆகாஷின் கண்களில் வந்த கேள்வியை கவனித்து பேச்சை பாதியில் நிறுத்தினாள்.
முன்பு அவனை இங்கே சந்தித்தப் போதும் இப்படி எதையோ தானே சொன்னாள்... ஆகாஷின் மனதில் வந்த கேள்வி அவனின் முகத்திலும் எதிரொலித்தது!
ஆகாஷின் முக மாற்றத்தை கவனித்த சினேகாவின் மனதினுள் எதுவோ உறுத்த,
“இங்கே இருந்து பார்த்தா அந்த பார்க்கோட வியூ ரொம்ப அழகா இருக்கும் சார்.. அதான் பார்த்துட்டு இருந்தேன்,” என்று அவசர அவசரமாக சொன்னாள்!
ஆகாஷின் மூளையில் இருந்த அத்தனை பல்புகளும் சட்டென்று உயிர்பெற்று பிரகாசமாக எரிந்தன!!!!
சினேகா இங்கிருந்து இயற்கையை தான் ரசித்திருக்கிறாள்!!!!
அவனை போலவே யோசித்திருக்கிறாள்!!!!!