பேபி பிங்க் நிற சேலையில் சின்ன சின்ன வெள்ளை நிற பூக்கள் நிறைந்திருக்கும் சேலை...
கண்களை உறுத்தாத நிறம்...
எப்ப்போதுமே அவள் அணியும் சேலை இப்படி உறுத்தாத நிறத்தில் இருப்பதை அப்போது தான் உணர்ந்தான்...
இதுவும் கூட காரில் அன்று அவள் சொன்ன காரணத்தினாலேயே இருக்க வேண்டும்...
இந்த மாதிரி அதிகமாக யோசிக்காமல் உனக்கு பிடித்ததை உடுத்தலாம், பேசலாம், செய்யலாம் என்று அவளிடம் சொல்லும் வாய்ப்பு அவனுக்கு கிடைக்குமா???
மனதுக்குள் ஓடிய யோசனையுடன் ஆகாஷ் அவளை ரகசியமாக பார்த்துக் கொண்டிருக்க, ப்ரின்டரின் அருகே இருந்த ஏ.சியில் ‘செட்’ (set) செய்திருந்த டெம்பரேச்சரை விட அறையின் வெப்பநிலை அதிகமாகி இருந்ததால், திடீரென அது செயல் பட தொடங்கியது... அந்த சில்லென்ற காற்று பட்டு சினேகாவின் சேலை படபடத்தது...
ஒரே ஒரு கணம் நாகரிக எல்லையை தாண்டி அவளை ரசிக்க சொன்ன மனதை உடனேயே அதட்டி அடக்கி வைத்தான் ஆகாஷ்... ஆனாலும் அவனின் கண்கள் இப்போதும் ரகசியமாக அவள் பக்கம் போய் வந்துக் கொண்டு தான் இருந்தது!
சினேகா பிரின்ட் செய்து அடுக்கி வைத்திருந்த பேப்பர்களில் இரண்டு திடீரென்று வீசிய ஏ.சி காற்று பட்டு பறந்து சென்று, அந்த ப்ரின்ட்டரின் மேல் பகுதியில் சென்று ஒட்டிக் கொண்டது!
அந்த பிரின்ட்டர் பெரியது... அது இருந்ததும் ஒரு உயரமான டேபிளில்... அதனால் மேலே இருந்த பேப்பர்களை சினேகா அவளின் உயரத்திற்கு எட்டி தான் எடுக்க வேண்டி இருக்கும்...
ஏற்கனவே ஏ.சி காற்றில் படபடத்துக் கொண்டிருக்கும் சேலையுடன் அவள் அப்படி எட்டி எடுத்தால் கட்டாயம் ஒரு மாதிரியான போஸ் கொடுப்பது போல தான் இருக்கும்...