தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 47 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
மனமே இல்லாமல் ஃபோனை டேபிள் மீது வைத்து விட்டு கட்டிலில் சாய்ந்து அமர்ந்த நந்திதாவின் மனம் இன்னமும் பரபரத்துக் கொண்டு தான் இருந்தது!
எத்தனை சொந்தம் இருந்தாலும், கல்யாணம் எனும் நிகழ்வால் ஏற்படும் சொந்தத்திற்கு மட்டும் அப்படி என்ன ஸ்பெஷல்? எதனால் இந்த பரபரப்பு, கிளுகிளுப்பு எல்லாம்?
இது மட்டுமே நாமே உருவாக்கி கொள்ளும் உறவு என்பதாலா???
நந்திதாவின் பார்வை அவளின் அம்மா அப்பாவின் படத்திடம் சென்றது.
அவர்கள் இருந்திருந்தால் அவர்களுக்கும் உதயை பிடித்திருக்கும்... யாருக்கு தான் அவனை பிடிக்காது...
யோசித்தப்படியே விளக்கை அணைத்து விட்டு படுத்தவளுக்கு தூக்கம் தான் வரவில்லை... ஆனால், அதற்காக அவள் வருத்தப் படவும் இல்லை!
உதயை பற்றியே யோசித்தப் படி படுத்திருந்தாள்... காலேஜ் நாட்கள் தொடங்கி இன்று வரை, அவளுக்கு நினைவில் இருக்கும் அவனுடன் பேசிய தருணங்களை ரீவைன்ட் செய்து பார்த்தாள்...
திடீரென பீப் பீப் என்ற சத்தம் கேட்டது... திடுக்கிட்டு பார்த்தவள் மொபைலில் மெசேஜ் வந்திருப்பதை புரிந்துக் கொண்டாள்.
ஃபோனை கையில் எடுத்துப் பார்த்தால், வேறு யாரு உதய் தான்!!!!
‘தூக்கமே வரலை நதி டார்லி’ என மெசேஜ் அனுப்பி இருந்தான்.
அவளுக்கு சிரிப்பு வந்தது...
‘கண்ணை மூடிட்டு நம்பர் கவுன்ட் செய்ங்க, தூக்கம் வரும்’ என அவனுக்கு ரிப்ளை அனுப்பி