“நல்லா இருக்கேன் ஒசிமம்... நீ எப்படி இருக்க?” என மறுபக்கமும் உற்சாகமான குரல் கேட்டது!
தோழியின் குரலை தெரிந்துக் கொண்டு நந்திதாவின் முகத்திலும் பெரிய புன்னகை உதயமானது!
துளசி, “நல்லா இருக்கேன்டி...” என தன் பேச்சை ஃபோனில் தொடர்ந்தாள்!
“என்னடி திடீர்னு நந்துக்கு கல்யாணம்னு குண்டை தூக்கி போட்டுட்ட?”
“பின்ன அவ மட்டும் கல்யாணம் செய்துக்காம ஃப்ரீயா இருந்தா எப்படி? அவ இங்கே தான் இருக்கா... நான் ஸ்பீக்கர் போட்ருக்கேன்...”
“சூப்பர்டி... கங்கிராட்ஸ் நந்து... பட் துளசி, எனக்கு ஈமெயில் பார்த்ததுமே இதெல்லாம் உன் சதியா இருக்கும்னு சந்தேகம் தான்... என் பையனுக்கு ஏழே வயசு தான் ஆகுது அதுக்குள்ளே எப்படிடா இந்த நந்துப் பொண்ணு கல்யாணம் செய்துக் முடிவு செய்துச்சுன்னு பார்த்தேன்....”
“ஹா ஹா ஹா...! உன்னுடைய சுறுசுறுப்பு எல்லோருக்கும் வருமா அருன்? நம்ம நந்து வெரி ஸ்லோ...”
“கண்ணு போடாதேடி...”
“அது சரி!!!! நீ மாறவே இல்லைப்பா...”
“இதெல்லாம் பிறவி குணம்... சரி, நீ அப்படியே லைன்ல இரு.... மனு, அபியையும் கான்ஃபரென்ஸ்ல கனக்ட் செய்றேன்...”
சொன்னது போல மற்ற இரு தோழிகளையும் கான்ஃப்ரென்ஸ் காலில் இணைத்தாள் அருணா.
நந்திதா உதட்டில் மின்னும் புன்னகையும், மலர்ந்த முகமுமாக நடப்பதை வேடிக்கைப்