மெதுவா திருப்பி கொடு...”
“துளசி...”
“இங்கே பார், இதுக்கு மேல நாம இதை பத்தி பேசி டைம் வேஸ்ட் செய்யக் கூடாது... உன் கிட்ட இருக்க ஆன்ட்டியோட நகையே போதும்னு நினைக்கிறேன்... எடுத்து பாலிஷ் செய்துக்கலாம்... பாங்க்ல தானே வச்சிருக்க?”
“ம்ம்ம்...”
“அப்போ ஓகே... அதை கடைசியா செய்துக்கலாம்... இப்போ ஷாப்பிங் ப்ளான் செய்வோம்... சாரீஸ் வேலையை முதல்ல முடிச்சிடுவோம்...”
“ம்ம்ம்ம்...”
“நீ, நான், அத்தை, ரேவதி அத்தை போகலாம்...”
துளசி மும்முரமாக திட்டமிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அவளின் செல்ஃபோன் மெல்ல சிணுங்கி அவளை தொல்லை செய்தது!
யார் என்று பார்த்த துளசி, முகம் மலர, “அட நம்ம அருணா... ஈமெயில் பார்த்துட்டா போலருக்கு,” என்றாள்!
“என்ன ஈமெயில்?”
“வேறென்ன, உன் கல்யாண விஷயம் நம்ம ஃப்ரென்ட்ஸ் எல்லோருக்கும் தெரிய வேண்டாமா?” என்று நந்திதாவிற்கு பதில் சொல்லிக் கொண்டே அழைப்பை ஏற்ற துளசி, ஸ்பீக்கர் ஆன் செய்து விட்டு,
“ஹைடி அருன், எப்படிடி இருக்க?” என்று மற்ற தோழியிடம் பேசினாள்.